- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி திரைப்படத்தில் அமீர்கானுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா... சுடச்சுட போஸ்டரை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு......

கூலி திரைப்படத்தில் அமீர்கானுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா… சுடச்சுட போஸ்டரை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு… சரி இவர் ரஜினிக்கு நண்பரா இல்லை வில்லனா….

- Advertisement -

நடப்பாண்டு ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படங்களில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் கூலி. நிச்சயம் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்றது போலவே கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கடந்து அவர் பிற மாநிலங்களிலும் முக்கியமான நடிகர்களை இதில் இடம் பெற வைத்திருக்கிறார். அதன்படி தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, கர்நாடகாவில் இருந்து உபேந்திரா, மலையாள சினிமாவில் இருந்து சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள். இதுபோக சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. அதிலும் ரஜினிகாந்த் துறைமுகத்தில் ஒரு ஊழியராக வருவது போன்று போஸ்டர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவர் தேவா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் துறைமுகம் சார்ந்த காட்சிகள் நிறைய இருப்பதால், விசாகப்பட்டினத்தில் இதற்காக பிரம்மாண்ட செட் போட்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல நாகர்ஜுனாவுக்கு படத்தில் வில்லன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு சைமன் என்னும் ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இருந்து அண்மையில் சிக்கிடு பாடல் வெளியானது. டி ஆர் இந்த பாடலை பாடியிருக்கிறார்.

- Advertisement -

அதுமட்டுமல்ல பாடலுக்கான ப்ரோமோ வீடியோவிலும் அவர் இடம் பெற்றிருந்தார். துள்ளலாக அமைந்திருக்கும் இந்த பாடலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டித் தொட்டி எங்கும் இந்த பாடல் ஹிட் அடித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 27ஆம் தேதி படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் ஏற்கனவே ஹாலிவுட் பிரபலம் அமீர்கான் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர் 15 நிமிட காட்சியில் நடித்திருப்பதாகவும், கேமியோ ரோலில் வருவதாகவும் கூறினார்கள். இப்படியான சூழலில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதில் பனியன் உடன் பிளாக் ஆண்டு ஒயிட் புகைப்படத்தில் சிகார் புகைத்த படி கம்பீரமாக காட்சியளிக்கிறார் அமீர்கான். அவர் தஹா எனும் கதாபாத்திரத்தில் வருகிறார். வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்