- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பட டைரக்டரா? சூர்யா பட டைரக்டரா? - எஸ்கே 25 படத்தை இயக்கப் போவது...

விஜய் பட டைரக்டரா? சூர்யா பட டைரக்டரா? – எஸ்கே 25 படத்தை இயக்கப் போவது யார்? சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு – போடு வெடிய, ரசிகர்கள் உற்சாகம்

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இப்போது விஜய் நடிப்பில் தி கோட் படத்தை இயக்கி முடித்திருககிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி, தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்குவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் முதலில் ஒரு திட்டம் இருந்தது.

ஆனால் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து முடித்துள்ள அமரன் படமும், அதைத்தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிங்க நடை படத்திற்கு பிறகு அவர் நடிப்பது 25வது படமாகும். இந்த 25 வது படத்தை தான் வெங்கட்பிரபு இயக்குவதாக ஒரு திட்டம் ஆரம்பத்தில் இருந்தது. வெங்கட்பிரபுவும் சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்தார்.

- Advertisement -

ஆனால் இதற்கிடையே புறநானூறு என்ற படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருந்த சூர்யா, திடீரென பின்வாங்கி விட்டார். ஏனெனில் இந்த படத்தை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி சுதா கொங்கரா எடுக்க திட்டமிட்டுள்ளதால், சர்ச்சைக்குரிய அந்த கதையில் நடிக்க நடிகர் சூர்யா விரும்பவில்லை.

அதனால் சுதா கொங்கராவிடம், கதையில் சூர்யா சில மாற்றங்கள், திருத்தங்களை செய்யச் சொன்னதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த படத்தில் சூர்யா நடிக்க விருப்பமில்லை என்று கூறி விலகி விட்டார். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை விட இந்த படத்தை பலமடங்கு சிறப்பாக தர திட்டமிட்டுள்ள சுதா கொங்கரா, இந்த கதையை படமாக்கியே தீருவது என்ற முடிவில் இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக முதலில் பேச்சு அடிப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு அடுத்தடுத்த படங்கள் கமிட்மெண்ட் காரணமாக தனுஷ், பிஸியாக இருப்பதால் அதுவரை காத்திருக்குமாறு சுதா கொங்கராவிடம் தனுஷ் கேட்டுக்கொண்டார். அதுவரை பொறுமை காக்க முடியாது என, சுதா கொங்கரா மறுத்துவிட்டார்.

இதையடுத்து தற்போது புறநானூறு படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகிவிட்டது. வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 26 அல்லது 27வது படத்தில் நடித்துக்கொள்ள முடிவு செய்த சிவகார்த்திகேயன், புறநானூறு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லி, சுதா கொங்கராவுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார். சிறந்த படைப்பாளியாக கவனிக்கப்படும் இயக்குனர் என்பதால், சிவகார்த்திகேயனின் இந்த முடிவால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்