முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நட்பில் இருந்த ஆச்சி மனோரமா ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். எனினும் ரஜினிகாந்த் அதை பெரிதுபடுத்தாமல் தன்னுடைய அருணாசலம் படத்தில் அவரை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்தார். மேலும் கருணாநிதி தலைமையில் கமல்ஹாசன் மனோரமா உள்ளிட்டோர் பங்கேற்ற ஒரு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசினார்.
அந்த விழா மேடையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, நான் நடித்த பில்லா படம் ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும் போது ஒரு பாட்டு எடுக்கப்பட்டது. நாட்டுக்குள்ள என்னை பத்தி என்ன சொல்றாங்க என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பாடல் காட்சி பல இடங்களில் எடுக்கப்பட்டது.
ஒரு குப்பத்துக்கு பக்கத்தில் பீச்சில் அந்த பாடல் காட்சியை ஷூட் பண்ணிட்டு இருக்கோம். அப்போ அங்கே ஆச்சியும் இருக்காங்க. அப்படி ஷூட் பண்ணிட்டு இருக்கும் போது அங்க கூட்டத்தில் இருந்து ஒரு சத்தம் வந்தது. பரவாயில்லையே, பைத்தியம் நல்லா ஆடுதே அப்படீன்னு கமெண்ட் வந்தது.
அப்போ எனக்கு நெர்வஸ் பிரேக் டவுன் ஆயிட்டு அப்புறம்தான் க்யூர் ஆகி வந்திருக்கேன். அப்போ ஒரு மாதிரி என்னை பேசிட்டு இருக்காங்க. பரவாயில்லையே பைத்தியம் நல்லா ஆடுதேன்னு சொல்லிட்டாங்க. கட் கட்டுன்னு அப்போ ஆச்சி சொல்லிட்டாங்க.
அப்புறம் ஆச்சி வாடா இங்கே வாடா இங்கே யாருடா பைத்தியம்? யாரடா பைத்தியம்? வாடா இங்கே அப்படீன்னு அவன் சட்டையை பிடிச்சு அடி அடின்னு அடிச்சிட்டாங்க. அவன் எவ்ளோ கஷ்டப்பட்டு பண்ணீட்டு இருக்கான். இப்படி நீ சொல்றியா? முதல்ல இவனை வெளியே அனுப்பினா தான் இங்க ஷூட்டிங் நடக்குமுன்னு சொல்லிட்டாங்க.
அப்புறம் நான் அப்படியே உட்கார்ந்துட்டேன். அவன் போன அப்புறம்தான் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணினாங்க. ஒருவாட்டி அரவணைச்ச கை ஆயிரம் தடவை அடிச்சா கூட நான் ஏத்துப்பேன். ஆச்சி நீங்க வாழற வரைக்கும் மன நிம்மதியோடு ஆரோக்கியமான உடம்போட நீங்க நடிச்சிட்டே இருக்கணும்ன்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன் என அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.





