விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவார் என பலரும் நினைத்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக திடீரென ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தில் ஒரு திரைப்படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் உள்ள பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் டைரக்சன் படித்தவர். மேலும் திரைக்கதை பயிலும் கல்வியையும் மேற்கொண்டுள்ளார். இவர் இயக்கிய ஒரு குறும்படம் உலக சினிமா தரத்தில் இருந்ததாக பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஜேசன் சஞ்சய் இது வரை மூன்று நடிகர்களிடம் மூன்று ஒன்லைன்களை கூறியிருக்கிறாராம். அதாவது அஜித், விஜய் சேதுபதி, அனிருத் ஆகிய மூவரிடமும் ஒன்லைனை கூறியிருக்கிறாராம்.
அதாவது அனிருத்தை ஹீரோவாக வைத்து ஒரு ஒன்லைனை கூறியிருக்கிறாராம் ஜேசன் சஞ்சய். இவ்வாறு ஒரு தகவலை செய்யாறு பாலு தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அனிருத் இதற்கு முன்பு ஸ்டன்ட் இயக்குனர்களான அன்பறிவ் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் எனவும் அந்த படத்தில் லோகேஷ் கனகராஜும் அனிருத்துடன் இணைந்து நடிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அந்த புராஜெக்ட்டை குறித்த வேறு எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
இந்த நிலையில்தான் ஜேசன் சஞ்சய் அனிருத்தை கதாநாயகனாக வைத்து ஒரு ஒன்லைனை கூறியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.





