- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஒரு விஷயத்தை கேட்டு லண்டன் செல்லும் விமான டிக்கெட்டையே கேன்சல் செய்தார் ரஜினிகாந்த் -...

அந்த ஒரு விஷயத்தை கேட்டு லண்டன் செல்லும் விமான டிக்கெட்டையே கேன்சல் செய்தார் ரஜினிகாந்த் – இசையமைப்பாளர் அனிருத் சொன்ன சீக்ரட்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது 74 வயதிலும் படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் 50 வயது அல்லது 55 வயது கடந்து விட்டாலே பல நடிகர்கள் அப்பா தாத்தா கேரக்டர்களுக்கு மாறிவிடுகின்றனர். போலீஸ் டாக்டர் வக்கீல் என குணச்சித்திர கேரக்டர்களில்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் மறுக்கப்பட்டால் டிவி சீரியல்களுக்கு போய் விடுகின்றனர்.

ஆனால் 1975ம் ஆண்டில் 24 வயதில் சினிமாவுக்குள் வந்த ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஹீரோவாக நடித்து வருகிறார். வேட்டையன் படத்தை தொடர்ந்து அடுத்தாக அவரது நடிப்பில் உருவான கூலி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸாகிறது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தை பொருத்த வரை அவருடன் நடித்தவர்களும் அவருடன் பழகியவர்களும் நெருக்கமான நண்பர்களும் அவரை எளிமையை பார்த்துதான் வியந்து போகின்றனர். ஒரு படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தும் அவரது எளிமை யதார்த்தம் கண்டு அப்படியே அசந்து போய் விடுகின்றனர்.

இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர் மகன். அதாவது அவரது மனைவி லதா ரஜினிகாந்தின் சகோதரர் மகன்தான் அனிருத் என்று சொல்லப்படுகிறது. அதாவது ரஜினிகாந்த், நான் பார்த்து வளர்ந்த பையன்தான் அனிருத் என்று ஜெயிலர் பட விழாவில் அனிருத் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்களுக்கும் இசையமைப்பாளர் அனிருத் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய அனிருத் கூறியதாவது, பொதுவாக ஹீரோக்களாக இருப்பவர்கள் நல்ல வசதியான சவுகரியமான சொகுசு ரூம்களில் தங்குவதை தான் விரும்புவார்கள். ஆனால் ரஜினிகாந்த் அப்படி இல்லை. நான் ஒரு உதாரணமே சொல்கிறேன்.

ஒருமுறை அவர் லண்டனுக்குச் செல்ல வேண்டும். அங்கே அவருக்கு ரூம் புக் செய்யப்பட்டிருந்தது. அந்த அறைக்கு ஒரு இரவுக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணம். ஒரு இரவுக்கு அவ்வளவு கட்டணமா என சொல்லி லண்டனுக்கு செல்லும் விமான டிக்கெட்டையே கேன்சல் செய்யச் சொல்லிவிட்டார். நான் சிறுவயதிலிருந்து இப்படியான பல விஷயங்களை பார்த்துதான் வளர்ந்து இருக்கிறேன். அதனால் கொஞ்சம் அதிகமாக செலவழிக்க வேண்டும் என்றால் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும் என்று இசையமைப்பாளர் அனிருத் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்