- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் இடம்பெற்ற சிக்குடு பாடல் குறித்து பேசிய இசையமைப்பாளர் அனிருத் - என்ன ஒரு...

கூலி படத்தில் இடம்பெற்ற சிக்குடு பாடல் குறித்து பேசிய இசையமைப்பாளர் அனிருத் – என்ன ஒரு அப்டேட் தந்திருக்கார்… அசந்துபோன ரஜினி ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் இருந்து சிக்குடு என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அனிருத் சாண்டி மாஸ்டர் டி ராஜேந்தர் டான்ஸ் ஆடிய இந்த பாடல் இணையத்தில் செம வைரலானது.

முதன்முறையாக லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் இணைந்திருக்கும் இந்த படத்தில் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் அமீர்கான் உபேந்திரா நாகர்ஜூனா சௌபிர் சாஹிர் போன்ற நட்சத்திர நடிகர்களும் நடித்திருக்கின்றனர். மேலும் நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடலுக்கு நடனமாடியும் இருக்கிறார்.

- Advertisement -

வருகிற 27ம் தேதி கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை படக்குழு மிக பிரமாண்டமாக செய்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் நடிகர் ரஜினிகாந்த் குட்டிக் கதை சொல்வரா? சமீபத்தில் அரசியல்வாதியாக மாறியிருக்கிற நடிகர் விஜய் குறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சிக்குடு பாடல் காட்சி குறித்து கூலி படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியதாவது, சிக்குடு பாடல் காட்சியில் ரஜினி ஆடிய நடனத்தை பார்த்து நான் அசந்து போய்விட்டேன். கடந்த 1970, 80களில் ரஜினி சார் நடனம் ஆடியதைப் போலவே இந்த படத்தில் சிக்குடு பாடலில் அவ்வளவு சுறுசுறுப்பாக நடனமாடி இருக்கிறார்.

- Advertisement -

தியேட்டரில் இந்த பாடல் காட்சியை பார்க்கும் ஒட்டுமொத்த ரசிகர்களும் அசந்து போவார்கள். அந்த அளவுக்கு லோக்கலாக இந்த பாடல் இருக்கிறது. அதற்கேற்ப ரஜினியின் நடனமும் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த பாடலை படப்பிடிப்பிற்கு முன்பே ரஜினிகாந்த் கேட்டுவிட்டு பாடல் ரொம்பவும் பிடித்திருப்பதாக கூறினார்.

ஆனால் ஆரம்பத்தில் இது போன்ற பாடலுக்கு நடனம் ஆடுவது கொஞ்சம் கஷ்டம் என்றுதான் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கூறினார். ஆனால் லோகேஷ் கனகராஜ் சிக்கிடு பாடலை படமாக்கிய விதமும், அதற்கேற்ப ரஜினியும் விறுவிறுப்பான நடனமும் மிகச் சிறப்பாக அமைந்து விட்டது. கூலி படம் ரிலீசான பிறகு இந்த பாடல், வேற லெவலுக்கு எங்கேயோ போய்விடும் என்று அனிருத் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்