தமிழ் சினிமாவில் நடிகர் கமலுக்கு அடுத்தபடியாக நடிப்புக்காக கேரக்டருக்காக அதிக மெனக்கெடுபவர் தன்னை தன் உடம்பை வருத்திக் கொண்டு நடிப்பவர் சியான் விக்ரம் மட்டும்தான். அவர் நடித்த காசி அந்நியன் ஐ சேது தங்கலான் போன்ற படங்களில் அவ்வளவு சிரமப்பட்டு தன் கேரக்டர்களை அற்புதமாக காட்டியிருந்தார்.
ஆனால் அவரது திறமைக்கான உழைப்புக்கான அங்கீகாரம் கிடைத்ததா இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தங்கலான் படத்தில் நடித்த சியான் விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. கேப்டன் மில்லர் ராயன் படங்களில் நடித்த நடிகர் தனுஷூக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சியான் விக்ரம் நடித்த இருமுகன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் சங்கர் மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ரியா சிபு நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஊர்வசி டிடிவி கணேஷ் சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்காமல் படப்பிப்பு நடந்து வந்தது. தற்போது படத்தின் தலைப்பை ஒரு அறிமுக வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர். இதில் படத்திற்கு பவர் ஹவுஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இது நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான சீக்ரெட் கோட் ஆகும். அதை இந்த படத்தின் டைட்டிலாக வைத்துள்ளனர். பவர் ஹவுஸ் படத்தின் அறிமுக டீசர் மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடுகிறது. இதில் குடும்பத்துடன் சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருவது போல் விக்ரமுக்கு ஒரு கேரக்டர் வருகிறது.
இன்னொரு கேரக்டரில் ஆக்சன் மோடு அதாவது வீட்டில் ஷோரூமில் இருவரை கட்டி வைத்துள்ளார் விக்ரம். அவர்கள் உடலில் இருந்து ரத்தம் வழிந்தோடுகிறது. அவர்களிடம், மாமு ஏண்டா அவசரப்படறே? இப்பதான் சமைக்க ஆரம்பிச்சிருக்கேன், புல் மீல்ஸ் கொடுத்துதான் அனுப்புவேன். 100 சதவீதம் கேரண்டி என விக்ரம் கிண்டலாக பேசுவது போல் அந்த காட்சி அமைந்துள்ளது.





