- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக கட்சி 2ம் ஆண்டு விழாவில் அரசியல்வாதிகள் பற்றிப் பேசிய நடிகர் விஜய் - அது...

தவெக கட்சி 2ம் ஆண்டு விழாவில் அரசியல்வாதிகள் பற்றிப் பேசிய நடிகர் விஜய் – அது குறித்து கடுமையாக விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில் ரிசார்ட் ஒன்றில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார். இந்த விழாவில் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் மற்றும் அரசியல் தேர்தல் வியூகம் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

விழாவில் பேசிய நடிகர் விஜய், திமுக பாஜக அரசியல் கட்சிகள் குறித்து பேசினார். அப்போது மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழகத்துக்கு கல்வி நிதி தர மறுக்கும் மத்திய அரசு, அதை கேட்டு வாங்காத மாநில அரசுகள் குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்தார்.

- Advertisement -

அதுகுறித்து நடிகர் விஜய் பேசுகையில் திமுகவை பாயாசம் என்றும் அரசியல் எனிமி என்றும் குறிப்பிட்டார். அதே போல் பாஜகவை பாசிசம் என்றும் கொள்கை எனிமி என்றும் குறிப்பிட்டு பேசினார். எந்த இடத்திலும் அவர் பாஜக என்றும் திமுக என்றும் அந்த கட்சிகளின் பெயர்களை உச்சரிக்கவில்லை.

அதே போல் முன்பெல்லாம் பண்ணையார்கள்தான் பதவியில் இருந்தனர். இப்போது பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்கள் ஆகி விட்டனர். நாட்டின் மீது அக்கறை இல்லாமல் பணம் ஒன்றே குறியாக கொண்டிருக்கும் இப்படிப்பட்ட பண்ணையார்களை அரசியலை விட்டு விரட்டுவதே என்னுடைய முக்கிய வேலை என்றும் நடிகர் விஜய் அந்த விழாவில் பேசினார்.

- Advertisement -

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, பண்ணையார் தனத்தை பத்தி நடிகர் விஜய் நேற்றைய தவெக கட்சி 2ம் ஆண்டு துவக்க விழாவில் பேசியிருக்கிறார். நடிகர் விஜயே பனையூரில் பண்ணையாராக தான் இருக்கிறார் என்று விமர்சிக்கின்றனர். அதைப் பத்தி அவர் பேசியதை தவிர்த்திருக்க வேண்டும்.

விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார். மேடையில் பேசும்போது திமுகவை திமுக என்று சொல்ல வேண்டும். பாஜக வை பாஜக என்று சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு பாயாசம் பாசிச கட்சிகள் என்று சொல்வதும் அரசியல் எனிமி கொள்கை எனிமி என்று சொல்வதும் நன்றாக இல்லை. அரசியல்வாதிக்கான இலக்கணத்தோடு விஜய் பேச வேண்டும் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்