தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் டைரக்டராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். பரபரப்புக்கு பெயர் போனவர் என்றால் அது மிகையல்ல. சமீபத்தில் கோர்ட்டில் இவருக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு காரணம், இவரது படங்கள் என்றால் அது மிகையல்ல. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் இருப்பது வன்முறை, போதை பொருட்கள் குறித்த சம்பவங்கள் மட்டுமே. டிரக் ப்ரீ சொசைட்டி என்று சொல்லும் இவரது படங்கள் எப்போதுமே, டிரக்ஸ் பத்தி பேசிக்கொண்டே இருக்கின்றன.
போதைப் பொருட்கள் பயன்பாடு, போதை பொருட்கள் கடத்தல். அதற்கான கேங் சண்டைதான் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மொத்த கருப்பொருளாக இருக்கிறது. இவரால் மற்ற இயக்குநர்களை போல காதல், குடும்பம், பாசம், நட்பு சார்ந்த படங்களை எடுக்கவே முடியாது என்பதுதான் உண்மை. இவரது ஸ்குவாடு தயாரிப்பு நிறுவனம் தயாரித்த பைட் கிளப் என்ற படமும், கஞ்சா போதைப்பொருள் குறித்த படமாக இருந்ததும் கவனிக்கத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் நடிகர்கள் கார்த்தி, கமல்ஹாசன், விஜய் நடித்துள்ளனர். இதில் விஜய் 2 படங்களில் நடித்துள்ளார். கைதி 2, லியோ 2, விக்ரம் 2 படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே ஆர்ஜே பாலாஜி நடிப்பில், கோகுல் இயக்கிய சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். அதாவது இந்த படத்தில், ஆர்ஜே பாலாஜி நடத்தும் சிங்கப்பூர் சலூனுக்கு ஹேர்கட் செய்ய வரும் கேரக்டரில் இயக்குநராகவே லோகேஷ் கனகராஜ் இதில் 10 நிமிடங்கள் வரை வருகிறார். அதே போல், இந்த படத்தில் ஜீவாவும் கேமியோ ரோல் செய்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஆர்ஜே பாலாஜி, படங்களில் நடிக்கிற விஷயத்தில், லோகேஷ் கனகராஜூக்கு சிறிதும் ஆர்வம் இல்லை. அவருக்கு படத்தில் இயக்குவதில்தான் ஆர்வம் அதிகம். என்னை பார்க்கும் போதெல்லாம், ஜப்பான் சலூன் படத்தில், அவர் நடித்த காட்சியை தூக்கி விட்டீர்களா, என சிரித்தபடியே கேட்பார். இல்லை, கண்டிப்பா அந்த சீன் படத்துல வரும், என்று சொன்னால் சிரித்தபடி சென்றுவிடுவார், என்று கூறியிருக்கிறார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.





