- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் கை கோர்க்கும் நடிகர் சூர்யா, இந்த கூட்டணியில் இணையும் மற்றொரு மாஸ்...

அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் கை கோர்க்கும் நடிகர் சூர்யா, இந்த கூட்டணியில் இணையும் மற்றொரு மாஸ் ஹீரோ யார் தெரியுமா? போட்றா வெடிய!

- Advertisement -

நடிகர் சூர்யாவுக்கு சமீபமாக பெரிய வெற்றிப் படங்கள் இல்லாத நிலையில் அவர் நடிக்க வேண்டிய வணங்கான், புறநானூறு படங்கள் கைநழுவிப் போய்விட்டன. அதுவும் டைரக்டர்கள் பாலா, சுதா கொங்கரா போன்ற முக்கிய இயக்குனர்களின் படங்களை சூர்யா நழுவ விட்டது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது.

எனினும் வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகிற நடிகர் சூர்யா கங்குவா படம், நிச்சயமாக அவருக்கு பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் கங்குவா படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இந்த படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்திருப்பதும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை தந்திருக்கிறது. இவர், தளபதி 69 படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

இந்த சூழலில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆகியிருக்கிறார். அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.

துவக்கத்தில் ஆர்ஜேவாக பணிசெய்த பாலாஜி, பிறகு சில படங்களில் காமெடி ரோல்களில் நடித்தவர். பிறகு யுகேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்ற ஒரு நடிகராக மாறினார். படங்களின் இயக்குனராகவும் ஆர்ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறார். நடிகர் விஜய்க்கும் இவர் சமீபத்தில் கதை சொன்னதாக கூறப்பட்டது.

- Advertisement -

இப்போது சூர்யா நடிக்கும் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ளார். சூர்யாவுக்கு ஆர்ஜே பாலாஜி சொன்ன கதை, நடிகர் விஜய்க்கு சொன்ன கதை தான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் எப்படியிருப்பினும் சூர்யா என்ற மாஸ் ஹீரோவுடன் ஆர்ஜே பாலாஜி இணைந்திருப்பது என்பது பெரிய வெற்றியை கொடுக்கும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் புதிய திருப்பமாக, இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. துபாயில் உள்ள ஏஆர் ரகுமானை துபாய் சென்று நேரில் சந்தித்த சூர்யா 45 படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, படத்தின் கதையை சொல்லியிருக்கிறார். அவரும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும். சூர்யா, ஏஆர் ரகுமான், ஆர்ஜே பாலாஜி என்ற இந்த கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்