- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் - மாரி செல்வராஜ் படம் குறித்து முக்கியமான அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்... சிறப்பான சம்பவம்...

தனுஷ் – மாரி செல்வராஜ் படம் குறித்து முக்கியமான அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்… சிறப்பான சம்பவம் என கெத்து காட்டும் தனுஷ் ரசிகர்கள்…

- Advertisement -

மாரி செல்வராஜ் தற்போது பைசன் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இதுபோக ரஜிஷா விஜயனும் படத்தில் இருக்கிறார்.

லால், பசுபதி, கலையரசன், அழகம்பெருமாள் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். பைசன் படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. மாரி செல்வராஜ் படம் என்றாலே அதில் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைப்பாளராக இருப்பார். மாமன்னன் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார்.

- Advertisement -

இப்படியான சூழலில், இந்த முறை ஒரு புதுமையாக அவர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் கைகோர்த்து இருக்கிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இதன் கதையை மாரி செல்வராஜ் எழுதி இருப்பதாக சொல்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விரைவில் பைசன் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த நிலையில் பைசனை தொடர்ந்து அவர் தனுஷ் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். வரலாற்று பின்னணியில் இந்த திரைப்படம் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

தனுஷின் 56வது திரைப்படமாக இது உருவாகிறது. தற்போது தனுஷ், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தொடர்ந்து அவர் இட்லி கடை திரைப்படத்தின் பணிகளிலும் கவனம் செலுத்துகிறார். இதன் பிறகு, அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ்.

இப்படி அடுத்தடுத்த திரைப்படங்கள் தனுஷின் கைவசம் இருக்க, மாரி செல்வராஜ் தனுஷ் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி, தனுசை வைத்து இரண்டு திரைப்படங்களை தான் எடுக்க இருப்பதாகவும், அதில் முதல் படத்தை போர் தொழில் படத்தை எடுத்த விக்னேஷ் இயக்க உள்ளதாகவும் கூறினார். இதில் இரண்டாவது படத்தையே மாரி செல்வராஜ் இயக்குகிறார். தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்