- Advertisement -
Homeபொழுதுபோக்குவேறு வழியின்றி விஜய் படத்தை நானே டைரக்ட் செய்தேன் - படவிழாவில் வெளிப்படையாக பேசிய இயக்குனர்...

வேறு வழியின்றி விஜய் படத்தை நானே டைரக்ட் செய்தேன் – படவிழாவில் வெளிப்படையாக பேசிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இயக்குனராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் தங்கர் பச்சான். அழகி பள்ளிக்கூடம் சொல்ல மறந்த கதை போன்ற படங்களை இயக்கியவர். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற படத்தில் அவரே நாயகனாகவும் நடித்திருந்தார். இப்போது அவரது மகன் விஜித் பச்சான் நடித்த பேரன்பும் பெருங்கோபமும் என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது.

ஏற்கனவே தங்கர்பச்சான் தன் மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகப்படுத்தி டக்குமுக்கு டிக்கு தாளம் என்ற படத்தை டைரக்ட் செய்தார். ஆனால் அந்த படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதன்பிறகு அவரது மகன் விஜித் பச்சான், சிவப்பிரகாஷ் என்பவர் இயக்கத்தில் பேரன்பும் பெருங்கோபமும் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம்தான் முதலில் வெளியாகும் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் விஜயின் அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாவது, தங்கர் பச்சான் இயக்கிய படங்களை திரைப்படங்களாக இல்லாமல் காவியங்களாகத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படிப்பட்டவர் தன் பையனை அறிமுகப்படுத்த நினைக்கும் போது அவரை நிறைய செதுக்க வேண்டும் என்பதால் அந்த பொறுப்பை இன்னொரு இளைஞரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நான் கூட அதைத்தான் செய்ய நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

- Advertisement -

கடந்த 1990களில் நான் பிஸியாக இருந்தபோது என் மகன் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட சமயத்தில், நாமே டைரக்ட் செய்தால் அது நன்றாக இருக்காது என நினைத்து விஜயின் ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குனர்களிடம் போய் நின்றேன். ஆனால் ஒருவர் கூட விஜயை வைத்து படம் இயக்க முன்வரவில்லை.

அதனால் வேறு வழியின்றி நானே நாளைய தீர்ப்பு என்ற படத்தை இயக்கினேன். ஆனால் இளைஞனான தன்மகன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் போய் நன்கு ஒட்டிக் கொள்ள வேண்டும் என்றால், அதை இன்னொரு இளைஞன் அந்த படத்தை இயக்கினால் தான் சரியாக இருக்கும் என நினைத்து தங்கர் பச்சான் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்துள்ளார் என்று அந்த விழாவில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்