- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள ஹிட் படங்களுக்கு செக் வைத்து ரூ. 100 கோடி வசூலை தட்டித் தூக்கிய அரண்மனை...

மலையாள ஹிட் படங்களுக்கு செக் வைத்து ரூ. 100 கோடி வசூலை தட்டித் தூக்கிய அரண்மனை 4, ஓடிடியில் ரிலீஸ் – எப்போ எதுல வரப்போகுது தெரியுமா?

- Advertisement -

நடப்பு ஆண்டில் 2024 துவக்கத்தில் இருந்து, தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது. ஆனால் எந்த படமுமே பெரிய அளவில் மெகா ஹிட் படமாக அமையவில்லை. குறிப்பாக அதிக எதிர்பார்ப்பில் இருந்த லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான் போன்ற படங்கள், தோல்வியடைந்தன. வசூல் ரீதியாக கேப்டன் மில்லர் இருந்தாலும், ஆக்‌ஷன், வன்முறை படமாக விமர்சனத்தை பெற்றது.

அதே போல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிங்கப்பூர் சலூன், லவ்வர், ஸ்டார், ரத்னம் போன்ற படங்களும் மெகா அளவில் சொதப்பல் படங்களாக அமைந்தன. வடக்குப்பட்டி ராமசாமி படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும், வசூலில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. குறைந்த பட்ச லாபத்தை தான் பெற்றது.

- Advertisement -

ஆனால், 2024 முதல் மலையாளத்தில் வெளியான படங்கள் தமிழ்நாட்டில் சக்கை போடு போட்டன. குறிப்பாக பிரேமலு, மஞ்சும்மெல் பாய்ஸ், பிரமயுகம், ஆடுஜீவிதம், ஆவேசம் போன்ற படங்கள், மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அதிலும் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான பிரேமலு ரூ. 135 கோடி, மஞ்சும்மெல் பாய்ஸ் ரூ. 230 கோடி என பட்டையை கிளப்பியது.

அதே நேரத்தில் ரஜினி நடிப்பில் வேட்டையன், கமல் நடிப்பில் இந்தியன் 2, விஜய் நடிப்பில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம், டைரக்டர் பாலாவின் வணங்கான், அஜிீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி, தனுஷ் இயக்கத்தில் ராயன், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் போன்ற படங்கள் லைன் அப்பில் இருந்து வந்தாலும், அடுத்தடுத்து வந்த மலையாள படங்கள், மெகா ஹிட் அடித்தன.

- Advertisement -

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழில் வெளிவந்த எந்த படமுமே சரியான ரீச் கொடுக்காத நிலையில், சுந்தர் சி இயக்கத்தில், அவரே நாயகனாக நடித்த அரண்மனை 4 வெளியானது. தமன்னா, ராஷிக்கண்ணா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த இந்த படம், மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்து, ரூ. 100 கோடி வசூலை மிக எளிதாக கடந்தது. ஹிப் ஆப் ஆதியின் இசையில், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் ஆகின.

கடந்த மே மாதம் 3ம் தேதி அரண்மனை 4 ரிலீஸ் ஆன நிலையில், இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் ஓடிடி தளத்தில் அரண்மனை 4 வெளியாக இருக்கிறது. தேர்தல் முடிவு நாளை ( 4ம் தேதி) வெளியாகும் நிலையில், அதன்பின்பு இந்த படம், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

சற்று முன்