- Advertisement -
Homeபொழுதுபோக்குஅருள்வான் படத்தில் நான் நடித்திருக்கும் கேரக்டர் பெயர் - எனக்கு பிரச்னை வரக்கூடாது என்று நினைத்தேன்,...

அருள்வான் படத்தில் நான் நடித்திருக்கும் கேரக்டர் பெயர் – எனக்கு பிரச்னை வரக்கூடாது என்று நினைத்தேன், நடிகர் அருள்நிதி சொன்ன சீக்ரட்!

- Advertisement -

திமுக குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் அருள்நிதி என்பது அனைவரும் அறிந்ததுதான். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் படம் மூலம் அறிமுகமான அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். எனினும் டிமாண்டி காலனி டிமாண்டி காலனி 2 படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. விரைவில் டிமாண்டி காலனி 3 படமும் வெளியாக உள்ளது.

மேலும் தகராறு நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் கழுவேத்தி மூர்க்கன் இரவுக்கு ஆயிரம் கண்கள் டைரி ஆறாது சினம் களத்தில் சந்திப்போம் என பல படங்களில் நடிகர் அருள்நிதி நடித்திருக்கிறார். ஒரு கன்னியும் நாலு களவாணிகளும் மௌனகுரு பிருந்தாவனம் போன்ற படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள படம் அருள்வான். இந்த படத்தில் அருள் நிதியுடன் ஆரவ் காளி வெங்கட் ரம்யா பாண்டியன் விடிவி கணேஷ் ஜான்விஜய் பேபி கிருத்திகா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

வரும் 17ம் தேதி அருள்வான் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அருள்நிதி அருள்வான் படம் குறித்து கூறியதாவது, அருள்வான் படத்தின் கதையை இயக்குனர் சொல்லிவிட்டு ஐந்து நாட்கள் மட்டும் கால் சீட் கொடுத்தால் போதும் என்றார். பிறகு படப்பிடித்து தளத்துக்கு சென்ற பிறகு ஐந்து நாள் என்பது பத்து நாளாகவும் பிறகு 15 நாளாகவும் பிறகு 20 நாளாகவும் அதிகரித்துவிட்டது.

- Advertisement -

நான் முழு படத்தில் நடித்திருந்தாலும் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா என்பது தெரியாது. முதலில் இயக்குனர் கதையை சொல்லும்போது யோசித்தேன். பயமாக இருந்தது. ஏனென்றால் படத்தின் நாயகன் ஆரவ்வால் எனக்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது. என்னால் அவருக்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்று நினைத்தேன்.

அருள்வான் படம் பார்த்த பிறகு நல்ல படத்தில் நடித்திருக்கிறோம் என்று தோன்றியது. இந்த படத்தில் முத்துவேல் என்கிற மாவட்ட ஆட்சியர் கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து பேசியிருக்கும் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று நடிகர் அருள்நிதி கூறியிருக்கிறார். முத்துவேல் என்பது கலைஞர் கருணாநிதியின் தந்தை பெயர், முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினின் தாத்தா பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்