- Advertisement -
Homeபொழுதுபோக்குநிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கலந்து கொள்ளாததற்கு...

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணமா… சரி, அருண் விஜய் அங்கு என்ன பேசி இருக்கார் தெரியுமா…

- Advertisement -

தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி இருக்கிறது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இன்றைய இளம் தலைமுறையினரின் காதலை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷின் சகோதரி மகன் ஆன பவிஷ்.

இதுபோக மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்களும் படத்தில் இணைந்துள்ளார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இதிலிருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

- Advertisement -

சமூக வலைதளத்திலும் இது ட்ரெண்டிங் ஆனது. இந்த திரைப்படத்தின் தலைப்புக்கு கீழே வழக்கமான காதல் கதை தான் என்று பதிவிட்டிருந்தார் தனுஷ். இந்த நிலையில், படத்திலிருந்து ட்ரெய்லர் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் பிரீமியர் ஷோவை முக்கிய நட்சத்திரங்கள் பலரும் பார்த்து விட்டார்கள். இந்தத் திரைப்படத்தைப் பார்த்து மிகுந்த உற்சாகம் அடைந்து விட்டதாகவும், தனுஷின் உலகத்தை கண்டு நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தை பார்த்து வாழ்த்தியிருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஆனால் இதில் படத்தின் இயக்குனரான தனுஷ் பங்கேற்கவில்லை. இட்லி கடை திரைப்படம் தொடர்பான ஷூட்டிங்கில் அவர் இருப்பதால் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்று, அந்த திரைப்படத்தில் நடித்து வரும் அருண் விஜய் தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,

ராயன் திரைப்படத்தைப் பார்த்து முடித்த போதே, எப்படியாவது தனுஷ் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று எண்ணினேன். அது நடந்து விட்டது. படப்பிடிப்பின் போது ஒரு காட்சியை முடித்துவிட்டு திடீரென கேரவனுக்குள் உட்கார்ந்து புதிய ஸ்கிரிப்ட் ஒன்றை அவர் எழுதிக் கொண்டிருப்பார். ஒரு நாள் சென்று பார்க்கிறேன் ஜிவி பிரகாஷ் இசையில் ஒரு பாடலை பாடிக் கொண்டிருக்கிறார். அவர் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார் ஒரு உத்வேகமாக உள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்