- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த போது கேரவன் வேனுக்குள் சந்தானம்… - நடந்த...

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த போது கேரவன் வேனுக்குள் சந்தானம்… – நடந்த விஷயத்தை பகிரங்கப்படுத்திய நடிகர் ஆர்யா

- Advertisement -

நடிகர் சந்தானம் நடிப்பில் மிக விரைவில், வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் திரைக்கு வர இருக்கிறது. இதில் மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோ இப்போது தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே ஒரு சர்ச்சை வீடியோவை வெளியிட்டு படத்துக்கு ஒரு அதிரடி விளம்பரத்தை சந்தானம் தேடிக்கொடுத்து விட்டார்.

அதாவது, அந்த வீடியோவில் ஊருக்குள்ள சாமி இல்லேன்னு சொல்லிட்டு திரிவானே, அந்த ராமசாமி தானே நீ என்று யாரோ ஒருவர் கேட்க, அந்த ராமசாமி நான் இல்லீங்க என சந்தானம் காவி வேட்டி, துண்டு அணிந்தபடி பதில் சொல்வார். அந்த வீடியோ கடந்த பொங்கல் வாரத்தில் வெளியாகி வைரலானது.

- Advertisement -

நடிக்க பட வாய்ப்புகளே இல்லாமல், இப்போதுதான் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சந்தானம் நடிக்கிறார். எதற்காக தேவையில்லாமல் இப்படி ஒரு காட்சியை வைக்க வேண்டும் என்று பலரும் திட்டித் தீர்த்தனர். இது தனது புதுப்படத்துக்கான ஒரு விளம்பர யுக்தியாக சந்தானம் செய்திருப்பது பின்னால் தெரிய வந்தது. அந்த வீடியோ வைரலான உடனே அதை அவரே தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து டெலீட் செய்து விட்டார்.

நடிகர் சந்தானம் ஆத்திகவாதியாக இருப்பவர். ஈஷா மையம் சத்குரு ஜக்கிவாசுதேவ் சீடராக தன்னை பல இடங்களில் வெளிப்படுத்திக் கொண்டவர். அங்கு நடக்கும் மகா சிவராத்திரி போன்ற பெரிய விழாக்களில் தவறாமல் பங்கேற்றும் வருகிறார். இந்த நிலையில் அவரது ராமசாமி வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில், கார்த்திக் யோகி டைரக்சனில் வெளியாகும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சந்தானத்தின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராக நடிகர் ஆர்யாவும் கலந்துக்கொண்டார். அவர் பேசுகையில், நிச்சயம் இந்த படம் ஹிட்டாகும். நானும் சந்தானமும் இணைந்து, விரைவில் கார்த்திக் யோகி இயக்கத்தில் அட்வென்சர் பேன்ஸி கதையில் நடிக்க இருக்கிறோம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிக்கும்போது எனக்கும், சந்தானத்துக்கும் ஒரே கேரவன்தான். அப்போது கேரவனுக்கு உள்ளேயே ஒரு ரசிகர், திடீரென சந்தானத்தை பார்க்க வந்துவிட்டார்.அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். அதனால் இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரிய ஹிட் படமாக செய்து விடுவார்கள், என்று பேசினார்.

- Advertisement -

சற்று முன்