- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிக்கப் போறது இவரா? - சூப்பர் நடிகராச்சே? -...

தக்லைப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிக்கப் போறது இவரா? – சூப்பர் நடிகராச்சே? – டைரக்டர் சார் இவரை மிஸ் பண்ணிடாதீங்க!

- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம், தக்லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் துவக்கத்திலேயே ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் இந்த படத்தை விட்டு விலகி விட்டனர்.

அதன்பிறகு மணிரத்னம் மனைவி சுகாசினி மேற்கொண்ட முயற்சியால் மீண்டும் இந்த படத்தில் துல்கர் சல்மான், ஜெயம்ரவி இந்த படத்தில் நடிக்க சம்மதித்தாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சிலம்பரசன், தக்லைப் படத்தில் நடிக்கும் பட்சத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று ஜெயம் ரவி மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மணிரத்னம் மிகப்பெரிய இயக்குனர். இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு புகழ்பெற்ற டைரக்டர். அவரது படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்றவர்கள் நடிக்க மறுப்பது, மணிரத்னத்துக்கு மிகப்பெரிய அவப் பெயரை ஏற்படுத்தும் என்பதால், மணிரத்னம் மனைவி நடிகை சுகாசினி, இந்த விஷயத்தில் அவரே பகீரத முயற்சி எடுத்து துல்கர் சல்மானையும், ஜெயம் ரவியையும் சமாதானப்படுத்தி, மீண்டும் தக்லைப் படத்துக்குள் கொண்டு வந்தார் சுகாசினி என்பது குறிப்பிடத்தக்கது.

கேங்ஸ்டர் கதை அம்சத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு காட்சிகள், இப்போது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடந்து வருகிறது. அங்கு நடிகர் கமல்ஹாசன் பங்கேற்ற சண்டை காட்சிகளை மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். ஏற்கனவே சைபீரியா, ராஜஸ்தான் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், அடுத்தடுத்த படப்பிடிப்புகளை வெளிநாடுகளில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த சூழலில் தக்லைப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று 2வது முறையாக நடிகர் ஜெயம் ரவி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விலகி விட்ட நிலையில், இப்போது ஜெயம் ரவி கேரக்டரில் தக்லைப் படத்தில் நடிக்க நடிகர் அசோக் செல்வன் கமிட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஓ மை கடவுளே, சபாபதி, போர்த்தொழில் உள்ளிட்ட பல படங்களில் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, சென்சேஷனல் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் அசோக் செல்வன். தக்லைப் படத்தில் நடிக்கிற தகவல் தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. சூப்பர் ஹீரோ சார் அவர், மிஸ் பண்ணிடாதீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்