- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த கேரக்டரில் மணிகண்டனை நடிக்க வைய்ங்க, கதையை கேட்ட பின் பிரபல நடிகர் கொடுத்த ஐடியா...

இந்த கேரக்டரில் மணிகண்டனை நடிக்க வைய்ங்க, கதையை கேட்ட பின் பிரபல நடிகர் கொடுத்த ஐடியா – நல்ல சான்ஸை இப்படி நழுவ உட்டுட்டீங்களே ப்ரோ?

- Advertisement -

சினிமா துறையை பொருத்த வரை யாருக்கு எப்போது எப்படி வாய்ப்புகள் அமையும் என்பதை சொல்ல முடியாது. சினிமாவில் ஜெயிக்க திறமை உழைப்பு இருந்தால் மட்டும் போதாது. கால நேரம் சூழ்நிலை சரியாக அமைய வேண்டும். நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக தான் சில நடிகர்களுக்கு அமைகிறது என்றால் அது பொய்யல்ல.

குறிப்பாக நடிகர் மணிகண்டன் காதலும் கடந்து போகும் காலா படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து ஜெய்பீம் படத்தில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. பிறகு நெற்றிக்கண் என்ற படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்தார்.

தொடர்ந்து அவர் நடித்த குட்நைட் படம் மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறது. இதில் குறட்டை மோகன் என்ற கேர்கடரில் மணிகண்டனின் யதார்த்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு வெளியான லவ்வர் படத்திலும் இன்றைய இளம் காதலர்களின் ஈகோ பிரச்னையை மையப்படுத்தி அழகான கதையில் நடித்திருந்தார்.

இப்போது ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளியான குடும்பஸ்தன் படத்திலும் மணிகண்டனின் நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நக்கலைட்ஸ் என்ற யூடியூப் சேனலில் கொங்கு தமிழ் மக்களின் வாழ்ககை கதைகளை காமெடி கலந்து சொல்லி பார்வையாளர்களை கவர்ந்தவர் ராஜேஷ்வர் காளிசாமி.

இப்போது தனது நக்கலைட்ஸ் டீமுடன் மணிகண்டன் ஆர் சுந்தர்ராஜன் குரு சோமசுந்தரம் ஆகியோரையும் நடிக்க வைத்து, இந்த படத்தை ஹிட் செய்திருக்கிறார். பல நேரங்களில் நக்கலைட்ஸ் வீடியோ பார்ப்பது போல கதைக்களம் சென்றாலும் ஒரு சில இடங்களில் காமெடி, சென்டிமென்ட் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது.

ஆனால் குடும்பஸ்தன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது மணிகண்டன் இல்லை. இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இந்த படத்தின் கதையை நடிகர் அசோக் செல்வனிடம்தான் கூறியிருக்கிறார். அவர் கால்ஷீட் இல்லாததால் இந்த கதையில் நடிக்க மறுத்து விட்டார். இந்த படத்தில் மணிகண்டன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஐடியாவும் கொடுத்திருக்கிறார். பிறகுதான் குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் கமிட் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்