இசைஞானி இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். இவரும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். பலரும் அறியாத விஷயம் கங்கை அமரன் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர். அவரும் பல பாடல்களை சொந்த குரலில் பாடியிருக்கிறார். இளையராஜாவை போலவே இவரும் இசையில் வல்லவர்தான்.
நடிகர் ரஜினிகாந்த் கெளதமி நிழல்கள் ரவி சரண்ராஜ் வைஷ்ணவி உள்ளிட்டோர் நடித்த படம் தர்மதுரை. இந்த படம் 1990களில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் தன் தம்பிகள் தன்னை அண்ணனாக மதிக்காததை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் ஆண் என்ன பெண் என்ன என்ற பாடலை பாடியிருப்பார். எஸ்பிபி குரலில் இந்த பாடல் இப்போதும் ரசிக்க வைக்கும்.
நேர்காணல் ஒன்றில் இந்த பாடல் குறித்து கங்கை அமரன் கூறியதாவது, எப்போது தன்னை விட மற்றொருவர் சரிக்கு சமமாக வளர்வது கண்களுக்கு பிடிக்காது. இது எல்லா உறவுகளிலும் யதார்த்தம்தான். வழக்கமாக நான் அண்ணன் இளையராஜா பாஸ்கர் எல்லாரும் மதிய வேளையில் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம். அவரவர் வீடுகளில் இருந்து சாப்பாடு வந்துவிடும். ஆனால் அன்று இளையராஜா எங்களை அவருடன் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லை.
நான் தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும். இனிமேல் என்னை கொஞ்சம் ப்ரீயா சாப்பிட விடுங்க என்று கூறிவிட்டார். நாங்கள் புரஜெக்டர் ரூமில் அமர்ந்து சாப்பிட்டோம். ஆனால் சாப்பிட பிடிக்கவில்லை. ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட அண்ணன் தம்பி இப்படி பிரிவதற்கு என்ன காரணம் என்று வேதனையாக இருந்தது.
அப்போது அந்த நாளில் எழுதியதுதான் அந்த ஆண் என்ன பெண் என்ன எல்லாம் ஓரினம்தான் என்ற பாடல். அது படத்தில் ரஜினி தன் தம்பிகளை நினைத்து பாடுவார். ஆனால் உண்மையில் நான் என் அண்ணன் இளையராஜாவை வைத்து எழுதிய பாடல்தான் அது. ஒண்ணுக்கு ஒண்ணு ஆதரவு, உள்ளத்தில் ஏன் பிரிவு என்று எழுதியிருந்தேன்.
அந்த பாடல் வரிகளில்தான் அவரைதான் நான் குறிப்பிட்டேன். ஆனால் நாங்கள் பிரிந்த பிறகு, ஒரு கட்டத்தில் அவரே என்னை அழைத்து சேர்த்துக்கொண்டார். என்னைப்பற்றி தெரியாதா உனக்கு, என்று கேட்டார். நானும் சந்தோஷமாக அண்ணனுடன் சேர்ந்துக்கொண்டேன் என்று கங்கை அமரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





