தமிழ் சினிமாவில் வானமே எல்லை படம்தான் பப்லு பிருத்விராஜூக்கு முதல் படம். பிறகு பல படங்களில் நடித்தார். இவர் சிறுவனாக இருக்கும்போதே, நாளை நமதே என்ற படத்தில் சின்ன எம்ஜிஆராக ஒரு பாடல் காட்சியில் தோன்றியவர். நல்ல உடற்கட்டும், அழகான முகத்தோற்றமும் இவருக்கு ஹீரோ, வில்லன் வாய்ப்புகளை பட படங்களில் பெற்றுத் தந்தன.
பல ஆண்டுகளுக்கு முன் ஜெயா டிவியில் சவால் என்ற நிகழ்ச்சியை பப்லு பிருத்விராஜ், நிகழ்ச்சி தொகுப்பாளராக நடத்தி காட்டினார். அதாவது சாகசம் செய்யும் திறமையாளர்களை அவர்கள் இருக்கும் இடத்துக்கே நேரில் சென்று சந்தித்து, அவர்களது அதிசயிக்க வைக்கும் திறமைகளை, சவால்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்.
சினிமாவில் மட்டுமின்றி சீரியலிலும் பப்லு நடித்திருக்கிறார். சன்டிவியில் கண்ணான கண்ணே என்ற தொடரில் நடித்த வகையில், சின்னத்திரை பார்வையாளர்கள் மத்தியிலும் கணிசமான ஒரு வரவேற்பை பெற்றவர். இவரது மகன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மனைவியை பிரிந்து பப்லு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உடற்பயிற்சி, ஆரோக்கியம் என ஆர்வமாக இருக்கும் பப்லு, தன்னுடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்ய வந்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் பழகினார். நாளடைவில் அவர்களது நட்பு நெருக்கமானதால், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தனர். அதாவது லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் முறையில், தம்பதி போல ஒன்றாக இருந்தனர். திருமணம் செய்து கொண்டார்களா, இல்லையா என்பதை அவர்கள் உறுதியாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் பப்லு பிருத்விராஜ், ஷீத்தல் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பப்லு வயது 54, ஷீத்தல் வயது 24 என்பதால், தன்னைவிட 30 வயது குறைந்த பெண்ணுடன் பப்லு இருந்தது பலத்த சர்ச்சையை, விமர்சனத்தை கிளப்பியது. ஆனால், ஷீத்தலை பிரிந்துவிட்டதாக பப்லு வெளிப்படையாக கூறவில்லை. ஆனால், ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏன் ஒரு மாதமாக இருவரும் ஒன்றாக வீடியோ போடுவதில்லை, பிரிந்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு லைக் கொடுத்து, அதை உண்மை என மறைமுகமாக வெளிப்படுத்தி விட்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணல் பேசிய பப்லு பிருத்விராஜ், நான் இப்போது தெளிவாகி விட்டேன். என் வாழ்க்கை என்னவென்று புரிந்துவிட்டது. கடந்த முறை 11 லட்சம் ரூபாய் செலவழித்து என் பிறந்த நாளை கொண்டாடியது வேஸ்ட். இப்போது டிரெயின் படப்பிடிப்பில் கொண்டாடியது மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். அதாவது கடந்த பிறந்த நாளை ஷீத்தலுடன் கொண்டாடியதால் ரூ. 11 லட்சம் வேஸ்ட் ஆனது என மறைமுகமாக சொல்கிறார். மேலும், ஷீத்தல் என்ற கேள்விக்கு, நெக்ஸ்ட் கொஸ்டீன் என்று கேட்டு, அவரை பற்றி பேசவே நான் விரும்பவில்லை என, பப்லு சொல்லாமல் சொல்லி விட்டார். எனவே அவர்களது பிரிவை இந்த நேர்காணல் உறுதிபடுத்தி விட்டது.





