- Advertisement -
Homeபொழுதுபோக்குகோவில்களில் சினிமா பாடல்களை ஒலிக்க விடலாமா? கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

கோவில்களில் சினிமா பாடல்களை ஒலிக்க விடலாமா? கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

- Advertisement -

கோவில்கள் என்பது பொதுமக்களின் வழிபாட்டுக்குரிய புனிதமான தலங்கள். சுத்தம் சுகாதாரம் ஒழுக்கம் புனிதம் நிறைந்த பக்தி நிறைந்த கோவில்களில் அதிகாலை நேரங்களில் பக்தி பாசுரங்கள் இசைக்கப்படும். கடவுள் பக்தி நிறைந்த பாடல் வரிகள் கொண்ட பாடல்கள் ஸ்பீக்கர்களில் ஒலிக்க விடப்படும்.

குறிப்பாக எல்ஆர் ஈஸ்வரி சூலமங்கலம் சகோதரிகள் பி சுசீலா மற்றும் எஸ்பி பாலசுப்ரமணியம், கேஜே ஜேசுதாஸ் டிஎம் சௌந்தர்ராஜன் பாடிய முருகன் சிவன் ஐயப்பன் சுவாமிகள் பற்றிய பக்தி பாடல்கள் ஒலிப்பது வழக்கம். அதிகாலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் ஒலிக்கும் இந்த பாடல்கள் பக்தர்களுக்கு பக்தி பரவசம் தரும், ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும்.

ஆனால் சமீபகாலமாக கோவில்களில் பக்தி பாடல்கள் என்ற பெயரில் சினிமா பாடல்களே அதிகளவில் ஒலிக்க விடப்படுகின்றன. குறிப்பாக இசை கச்சேரிகள், ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் குத்தாட்ட பாடல்கள் ஒலிக்கின்றன. ஆபாச நடனங்கள், அருவறுக்கத்தக்க பாடல்கள் என கோவில்களில் காதுகள் கூசும்படியாக பாடல்கள் அதிகரித்து விட்டன.

மேலும், இப்போது ஹிட் ஆன சினிமா பாடல்களை அப்படியே டியூனில் காப்பியடித்து பக்தி பாடல்களாக பாடுவதும் அதிகரித்து வருகிறது. இதில் பாடல் வரிகள் கடவுளை பற்றியதாக இருந்தாலும் அதில் வரும் மெட்டு, நடிகர்களின் பிரபல பாடல்களாக இருப்பதும் பக்தர்களை அதிருப்தியடைய செய்கிறது. அதுவும் பெரும்பாலும் குத்தாட்ட பாடல்களே அவை இருக்கின்றன.

இதையடுத்து கோவில்களில் இனி சினிமா பாடல்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாகை மாவட்டம் திருக்கண்ணாபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர், தங்களது ஊர் கோவிலில் நடந்த சினிமா பாட்டு கச்சேரி குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, எந்த ஒரு கோவில் திருவிழாவாக இருந்தாலும் கோவில் வளாகத்துக்குள் கோவில் நிர்வாகிகள் அல்லது பக்தர்கள் சார்பில் ஏற்பாடு செய்யும் இசைக் கச்சேரிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். பக்தி அல்லாத சினிமா பாடல்களை இனி பாடக் கூடாது என்று நீதிபதி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.

சற்று முன்