- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படத்துல பகத்பாசிலுக்கு இப்படி ஒரு கேரக்டரா, அப்போ வில்லன் அவரில்லையா - ஆனா அவருக்கு...

வேட்டையன் படத்துல பகத்பாசிலுக்கு இப்படி ஒரு கேரக்டரா, அப்போ வில்லன் அவரில்லையா – ஆனா அவருக்கு கொடுத்திருக்கிற கேரக்டரே வேற லெவலா தான் இருக்கு

- Advertisement -

தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் வேட்டையன். ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் ரஜினி 170 படத்தின் டைட்டில் என அறிவிக்கப்பட்டு, டீசர் வெளியானது. குறி வெச்சா இரை விழணும் என ரஜினி டயலாக் மாஸ் ஆக இருந்தது. அதுவும் கண்ணாடியை தூக்கி போட்டு கண்களில் அமர்வது வேற லெவலில் இருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு வரும் மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அந்த படத்துக்கான ஸ்கிரிப்டை லோகேஷ் விறுவிறுப்பாக எழுதிக்கொண்டு இருக்கிறார். அதில் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், ஜீவன் ஆகியோர் நடிப்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

இப்போது ஒரு ஸ்டார் ஹீரோ படத்தில், மற்ற பிரபல நடிகர்கள் நடிப்பது வழக்கமாகி வருகிறது. ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் போன்றவர்கள் நடித்திருந்தனர். வில்லன் நடிப்பில் மலையாள நடிகர் விநாயகன் அதகளம் செய்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இப்போது ரஜினி நடித்துவரும் வேட்டையன் படத்தில் பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இன்னும் சில முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில், முழுமையான விவரங்களை இன்னும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது.

- Advertisement -

அதே வேளையில் குறி வெச்சா இரை விழணும் என்று ரஜினி பேசிய டயலாக் இப்போது வைரலாகி வருகிறது. அதாவது ஜெயிலர் படத்தின் வசூல் 515 கோடி ரூபாயை எட்டியது. அதுபோல் இந்த படத்தின் வசூலும் அதைவிட 600 அல்லது 700 கோடி ரூபாயை எட்ட வேண்டும் என்ற கான்செப்டில் ரஜினி பேசிய டயலாக் அது என ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

எனினும் வேட்டையன் படத்தில் நடிக்கும் பகத் பாசில், இதில் ரஜினிகாந்துக்கு மகனாக நடிக்கிறார். அவரது மனைவியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். டீசன்டான ஒரு வில்லன் கேரக்டரில் ராணா நடிக்கிறார். அதாவது ஜெயிலர் பட வில்லன் விநாயகன் போன்ற ஒரு கடத்தல் மன்னன் கேரக்டரிலோ, அந்த கெட்டப்பிலோ ஒரு கொடூர வில்லனாக ராணா நடிக்கவில்லை. கவுரவமான வில்லனாக நடிக்கிறார். ஏனெனில் தெலுங்கில் அவர் ஹீரோவாக நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்