- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 21ம் தேதி குடும்பத்தோடு கிளம்ப ரெடியாயிட்டார்… 23ம் தேதி ரிடர்ன்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 21ம் தேதி குடும்பத்தோடு கிளம்ப ரெடியாயிட்டார்… 23ம் தேதி ரிடர்ன் வருகிறார் – ஆமாங்க அங்கேதான் போறாரு தலைவர்!

- Advertisement -

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த படம் சரியாக ஓடவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லாததால், சுமாரான வரவேற்பையே பெற்றது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன போது, இதுவும் பீஸ்ட் மாதிரி சொதப்பிடும் என்றுதான் கூறப்பட்டது.

படத்தின் கதையும், திரைக்கதையும், வசனங்களும் 3ம் வகுப்பு பாடப்புத்தகம் போல இருந்தாலும், காலேஜ் பிரின்ஸிபால் வந்து பாடம் நடத்திய போல, ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துப் போனது. அட இது தங்கப்பதக்கம் சிவாஜிகணேசன் நடித்த படத்தின் கதை என்று பலர் சொல்லியும், இருந்தாலும் ரஜினி படம் என ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படைஎடுத்து வசூல் மழை பொழிய விட்டனர்.

- Advertisement -

500 கோடி ரூபாய் வசூல் மழை காரணமாக ரஜினிக்கு பாட்ஷா, படையப்பா போல இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமைந்தது. இதையடுத்து இந்த படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க ரஜினி சம்மதித்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன்தான் ஜெயிலர் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கின்றனர்.

ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளார். அதன்பிறகுதான் ஜெயிலர் 2ம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதாவது, 2025ம் ஆண்டில்தான் ஜெயிலர் திரைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்க உள்ளது. அங்கு ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க அரசியல், சினிமா, கிரிக்கெட், ஆன்மிகம் சார்ந்த அனைத்து விவிஐபிகள், விஐபிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் அவரது வீடுதேடி வந்து அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது. பாஜக மேலிட பொறுப்பாளர் அர்ஜூனமூர்த்தி, அந்த அழைப்பிதழை ரஜினியிடம் நேரில் வழங்கினார். இந்நிலையில் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த், சகோதரர் சத்யநாராயண கெய்டுவாட் ஆகியோருடன் 21ம் தேதி அன்று ராமர் கோவில் விழாவில் பங்கேற்க, அயோத்தி புறப்பட்டு செல்கிறார். 22ம் தேதி விழாவில் கலந்துக்கொள்கிறார். பிறகு 23ம் தேதி சென்னை திரும்புகிறார்.

- Advertisement -

சற்று முன்