- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பு தளத்தில் கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாரதிராஜா; முதல் மரியாதை படத்துக்கு பிறகு இப்போதுதான்…இயக்குனர்...

படப்பிடிப்பு தளத்தில் கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாரதிராஜா; முதல் மரியாதை படத்துக்கு பிறகு இப்போதுதான்…இயக்குனர் இமயமே கலங்கினால் எப்படி?

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜா இயக்குனர் இமயம் என்று தமிழ் சினிமாவில் போற்றப்படும் ஒரு சினிமா ஆளுமையாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவுக்கு அவரது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. ஒரு படைப்பாளியாக தனது அற்புதமான படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கி இருக்கிறார்.

குறிப்பாக 16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். பாரதிராஜா என்றாலே, அவரது, என் இனிய தமிழ் மக்களே என்ற அந்த கம்பீரக் குரல்தான் ரசிகர்கள் மனதில் நிற்கும். காதுகளில் இனிமையாக ஒலிக்கும்.

இப்போது வயது 80களை கடந்த நிலையில், பாரதிராஜா படங்களை இயக்குவதை தவிர்த்து விட்டு, சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதுவும் குறிப்பிட்ட படங்களில், முக்கியமான கேரக்டர்களை தேர்வு செய்து மட்டுமே அவர் நடிக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில், விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் புலவர் கலியப்பெருமாள் என்ற அந்த கேரக்டரில், முதலில் நடிக்க கமிட்டானது பாரதிராஜா தான். பிறகு அவர் நடிக்க மறுத்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அந்த கேரக்டரில் நடித்தார்.இப்போது பாரதிராஜா புலவர் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

ஆயிரம் பொற்காசுகள் என்ற படத்தை டைரக்ட் செய்த டைரக்டர் ரவி முருகையாதான் இந்த படத்தையும் டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக பாரதிராஜா நடித்திருக்கிறார். அதாவது குற்றவாளிகளை மிரட்டி, அடித்து உதைத்து உண்மைகளை வாங்க முடியாத நிலையில், அப்படிப்பட்ட கைதிகளிடம் அன்பாக பேசி, பாசம் காட்டி அவர்கள் மனதில் இருக்கும் உண்மைகளை வெளிவாகும் ஒரு கேரக்டரில் பாரதிராஜா நடித்திருக்கிறார்.

புலவர் படப்பிடிப்பில் 20 நாட்களுக்கு மேல் பாரதிராஜா நடித்தநிலையில் படப்பிடிப்பு முடிந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் கடைசி நாளில், பாரதிராஜா இயக்குனரிடம் கதறி அழுதிருக்கிறார். முதல் மரியாதை படத்துக்கு பிறகு, இந்த படத்தில் நடித்ததை மிகவும் பீல் செய்கிறேன். முதல் மரியாதை படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பும்போது ஒரு குடும்பத்தை பிரிவது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்த படத்திலும், அந்த உணர்வுடன் நான் வெளியேறுகிறேன் என்று இயக்குனரிடம் பேசி அழுதிருக்கிறார் பாரதிராஜா. அப்போது அருகில் இருந்த சிலரும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

சற்று முன்