பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு கண்டஸ்ட் ஆக வந்தவர் சாண்ட்ரா. அவருடன் அமித் பார்கவ் திவ்யா கணேஷ் மற்றும் சாண்ட்ராவின் கணவர் பிரஜின் என 4 பேர் வைல்டு கார்டு கண்டஸ்ட்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அதில் அமித் பார்கவ் மற்றும் பிரஜின் எவிக்சன் ஆகிய வெளியேறிய நிலையில் சாண்ட்ரா மற்றும் திவ்யா கணேஷ் விளையாடி வருகின்றனர்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கார் டாஸ்க்கில் சாண்ட்ராவை பார்வதி எட்டி உதைத்து காருக்கு வெளியே தள்ளினார். அதற்கு முன்னதாக சாண்ட்ராவிடம் தகாத வார்த்கைளில் தரக்குறைவாக பேசி கம்ருதீனும் அவரை பெரிய அளவில் மன உளைச்சலை தந்தார். இந்த விவகாரத்தில் கம்ருதீன் பார்வதி இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட்கார்டு காட்டி வெளியேற்றப்பட்டு விட்டனர்.
ஆனால் இப்போது சாண்ட்ராவுக்கு வந்த பேனிக் அட்டாக் குறித்தும் கம்ருதீன் கார் டாஸ்க்குக்கு பிறகு பெட்ரூம் பகுதிக்கு வந்த போது கம்ருதீனை பார்த்து பயந்து அலறி போட்ட கூச்சலும் பிறகு அவர் ரெட்கார்டு காட்டப்பட்ட பிறகு சாண்ட்ரா காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட போது போட்ட அலறலும் இப்போது பார்வையாளர்களிடம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒரு தரப்பினர் சாண்ட்ராவுக்கு பேனிக் அட்டாக் எதுவும் வரவில்லை. காரை விட்டு வெளியே தள்ளியவுடன் அவரே அப்படி ஒரு சீனை கிரியேட் செய்து நடித்து குவித்து விட்டார். நடிப்பு அரக்கியாக மாறிவிட்டார். இனிமேல் வலிப்பு நாயகி சாண்ட்ரா தான் நடிப்பு அரக்கி என்று கலாய்த்து வலைதள பக்கங்களில் பதிவுகளை செய்து வைரலாக்கி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சக போட்டியாளர்கள் இருக்கும் போது சுற்றிலும் கேமராக்கள் இருக்கும் போது கம்ருதீன் சாண்ட்ராவை அப்படி என்ன செய்துவிட முடியும்? அப்படி அவரை தாக்குவதற்கு கம்ருதீனுக்கு என்ன அவசியம் இருக்கிறா? எதற்காக அவ்வளவு கூச்சல் அலறல் என சாண்ட்ரா நடிக்க வேண்டும்? இது ரொம்பவும் ஓவர் சீனாக இருந்தது என்றும் பலர் கருத்துகளை கூறி வருகின்றனர்.
பார்வதி செய்தது தவறுதான் என்றாலும் சாண்ட்ரா அதை ரொம்பவும் பில்டப் செய்துவிட்டார். கடைசி நேரத்தில் அவர்களுக்கு ரெட் கார்டு காட்டப்பட்ட போது சாண்ட்ரா அவர்களுக்கு ஆதரவாக ரெட்கார்டு எல்லாம் வேண்டாம் சார். அவர்கள் இருவரும் திருந்தி இனிமேல் இப்படி நடந்துக்கொள்ளாமல் இருந்தால் போதும் என்று வாய் வார்த்தையாக கூட சொல்லி இருக்கலாம். அது அவரது பெருந்தன்மையாக இருந்திருக்கும். ஆனால் வாயை பொத்திக்கொண்டு அழுதாரா, சிரித்தாரா என்பது கூட தெரியவில்லை. மொத்தத்தில் சாண்ட்ராவும் ஒரு நடிப்பு அரக்கிதான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





