நடிகர் விஜய் இன்று வேலூரில் அகரம்சேரியில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது ஆக்ரோஷமாக வந்த காளை மாட்டுக்கு சிறுவன் ஒருவன் இரண்டு புல்லுகட்டுகளை கொடுத்து அமைதிப்படுத்தினான் என்று ஒரு குட்டிக்கதை சொன்னார். அதை தேர்தல் களம், மக்கள் என்று உவமைப்படுத்தி பேசியது டிரண்டிங் ஆகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் பேசிய காளை கதை குறித்து பிக்பாஸ் ஜூலி தனது வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஜூலி கூறியதாவது, ஹாய் ணா. நான் ஜூலி. இப்பதான் உங்க வேலூர் பரப்புரை பார்த்தேன். ஏஸ் யூஸ்வலி இந்த பரப்புரைலேயும் ஒண்ணும் இல்லேன்னு வெச்சுக்கோங்க.
இந்த ஜல்லிக்கட்டு காளை பத்தி எல்லாம் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லியிருந்தீங்க ணா. அதை கேட்டதுக்கு அப்புறம் என்னால பேசாமல் இருக்க முடியலே. நீங்க பாட்டுக்கு போற போக்குல ஜல்லிக்கட்டு காளை நின்னுச்சு, அதுக்கு ஒரு புல்லுக்கட்டை காமிச்சு குழந்தை கூட்டீட்டு போய் அப்படி ஓரமா விட்டுச்சுன்னு சொல்லீட்டு போயிட்டே இருப்பீங்க.
உங்க கட்சியில் இருக்கிற பாதி பேர் மைனர் ஆளுங்க. நானும் போய் புல்லுக்கட்டை காட்றேன்னு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா என்ன அண்ணா பண்றது? அம்பது அம்பதாவே இருக்கட்டும். 500 ஆக்கிடாதீங்க. கஷ்டப்பட்டு எல்லாரும் போராடி ஜல்லிக்கட்டு பங்ஷன் வாங்கி வெச்சிருக்கோம். அது பிராப்பராகவும் இப்போ நடந்துட்டு இருக்குது.
உங்கள் ரசிகர்கள் போய் புல்லுக்கட்டை காமிச்சு ஏதாச்சும் பிரச்னை ஆச்சுன்னா போராட திராணி இல்லண்ணே, கொஞ்சம் பார்த்து பக்குவமா பண்ணுண்ணே. உன் இஷ்டத்துக்கு பேசீட்டு போயிராதே ண்ணா என்று அதில் ஜூலி பேசியிருக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் தளபதி ரசிகர்கள் பிக்பாஸ் ஜூலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
என்னமோ ஜல்லிக்கட்டு போட்டி நடக்கறதே உன்னால்தான்ங்கிற மாதிரி பேசியிருக்கே? பிக்பாஸ்ல கமல் சொன்ன ஹெல்யூசன் பிரச்னை இன்னும் உனக்கு போகலையா? எவ்வளவு அசிங்கப்பட்டாலும் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா ஜூலி? தளபதி பத்தி எல்லாம் இப்படி பேசினால் நீ பெரிய ஆளுன்னு நெனைப்பா? என்று தளபதி ரசிகர்களும் டிவிகே கட்சியினரும் ஜூலியை கழுவி கழுவி ஊத்தும் விதமான கமெண்ட்களை செய்து வருகின்றனர்.





