இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடிகர் விஜய் ஏறக்குறைய நடித்து முடித்து விட்டார். கடந்த சில தினங்களாக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோவில் சிஜி தொழில்நுட்ப பணிகளுக்கான பிரத்யேக ஷூட் நடக்கிறது. அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். ஓரிரு தினங்களில் அதை முடித்துக்கொண்டு விஜய் சென்னை திரும்புகிறார்.
இந்த படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு பாடல் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி விட்டது, 2வது சிங்கிள் கேட்டு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் ஜூன் 22ம் தேதி, நடிகர் விஜயின் 50வது பிறந்த நாள் என்பதால் அன்று ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக செகன்ட் சிங்கிள் வெளியாக அதிக வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வெங்கட்பிரபு படத்தை தொடர்ந்து விஜய் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டைரக்டர் எச் வினோத் இயக்குவது 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா, சமந்தா, நயன்தாரா அல்லது பிரேமலு கதாநாயகி மமிதா பைஜூ இவர்களில் யாரேனும் ஒருவர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தை தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான டிவிவி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் டிவி தனய்யா தயாரிப்பதாக தான் முதலில் கூறப்பட்டது. இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்தும் அந்த தயாரிப்பாளருடன் பேசி இரு தரப்பிலும் வாய்மொழியாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
ஆனால் முறைப்படி எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகவில்லை. எதுவும் விதிமுறைகளின்படி பேசி, தீர்மானம் செய்யப்படாத நிலையில் டிவிவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில் சேட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி தளங்களில் விஜய் 69 படங்கள் வெளியீடுகளுக்கான வியாபாரம் பேசப்பட்டுள்ளது. இது விஜய் கவனத்துக்கு வர, அந்த தயாரிப்பாளரை வேண்டாம் என விஜய் மறுத்து விட்டதாக தகவல் பரவியது.
கோட் படத்தில் நடிக்க விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் இப்போதே விஜய் 69 படத்துக்கு விஜய் 250 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயித்துள்ளார். 10 கோடி 15 கோடி என்று இல்லாமல், கோட் படத்தின் வெற்றி தோல்வி நிலவரமே தெரியாமல் ரூ. 50 கோடி சம்பளத்தில் உயர்த்தி இருக்கிறார். விஜய் 69 படத்துக்கு 250 கோடி ரூபாய் மிக அதிகம் என்பதாலும், டிவிவி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் விலகி விட்டதாகவும் இப்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.





