- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் சீசன் 8 போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் இவர்கள்தான், இதுதான் இறுதி பட்டியலாக இருக்குமா?...

பிக்பாஸ் சீசன் 8 போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் இவர்கள்தான், இதுதான் இறுதி பட்டியலாக இருக்குமா? – ஆனா முதல்ல சொன்ன பல பேரை காணோமே?

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. 2017ம் ஆண்டு துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நடப்பாண்டில் பிக்பாஸ் சீசன் 8 நாளை மறுதினம் (6ம் தேதி) துவங்குகிறது. வருகிற ஞாயிறு மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கோலாகலமாக துவங்குகிறது.

நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி அனுப்பி வைக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் நுழையப் போகிறவர்கள் யார் என்பது குறித்து, தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் அந்த சஸ்பென்ஸ் ஆண்டுதோறும் நிகழ்ச்சி துவங்கும் நாளில் தான் தீர்க்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு வரை நடிகர் கமல்ஹாசன் தான் விஜய் டிவியின் பிக்பாஸ் தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியை மிக சிறப்பாக கொண்டு சென்றார். 2017 ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி, அவரது வாழ்க்கையில், சினிமா பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட பல சுவாரசியமான அனுபவங்களை, நினைவுகளை, தனது உணர்வுகளை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். அதே நேரத்தில் பல விதங்களில் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தியது ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருந்தது. குறிப்பாக அவர் வருகிற சனி, ஞாயிறு தினங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பலரும் தவறாமல் பார்த்து ரசித்தனர்.

- Advertisement -

ஆனால் இந்த முறை அவர் அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்றதால் அவரது இடத்தில் இப்போது நடிகர் விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் 8வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் சில பிரபலங்களின் பெயர்களும் உள்ளன. ஆனால் உண்மையில் யார் இந்த போட்டியில் பங்கேற்க போகிறார்கள் என்ற சூழ்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்கள் என இந்த பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ராப் பாடகர் பால் டப்பா, சீரியல் நடிகர் விஜே விஷால், தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகை அன்ஷிதா, மாடல் அழகி சௌந்தர்யா நஞ்சுண்டன், டிஜிட்டல் சின்னத்திரை பிரபலம் ஷாலின் சோயா, சீரியல் நடிகை தர்ஷா குப்தா, நடிகை சஞ்சனா, நடிகை சுனிதா, சீரியல் நடிகர் அர்னவ், சீரியல் நடிகர் அருண், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகர் கோகுல்நாத், சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் ,சீரியல் நடிகர் தீபக், நடிகர் ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா, சீரியல் நடிகை பவித்ரா ஜனனி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுதான் உண்மையான பட்டியல் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்