- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் 10 நாட்கள்தான்.. விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ம் தேதி துவக்கம்...

இன்னும் 10 நாட்கள்தான்.. விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ம் தேதி துவக்கம் – பிரபல இசையமைப்பாளர் பெயரும் கன்டஸ்டன்ட் லிஸ்ட்டுல வருதே?

- Advertisement -

எப்போதுமே மற்றவர்களின் பிரச்னைகளை தெரிந்துக் கொள்வதில் அடுத்தவர்கள் போடும் சண்டைகளை வேடிக்கை பார்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதை அடிப்படையாக கொண்டு அந்த கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. முதல் சீசன் முதல் 7வது சீசன் வரை நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு 2024ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

- Advertisement -

பிக்பாஸ் சீசன் 9 வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி விஜய் டிவில் துவங்குகிறது. இந்த முறையும் நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுப்பாளராக வருகிறார். முதலில் ஒரு டீசரும் பிறகு ஒரு வீடியோவும் வௌியான நிலையில் வரும் அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி துவங்குகிறது. அன்று போட்டியாளர்கள் அறிமுகத்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகின்றனர்.

ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் ஆர்வம் காட்டினர். பிரபல சினிமா நடிகர் நடிகைகள் சின்னத்திரை நடிகர் நடிகைகள் முன்வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் வீட்டுக்குள் நடக்கும் பிரச்னைகளால் அவர்களது பர்சனல் இமேஜ் டேமேஜ் ஆவதால் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர். ஒரு விதத்தில் அவர்களது தனிப்பட்ட செல்வாக்கு இந்த நிகழ்ச்சியால் மங்கி விடுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் வருகிற சீசன் 9 பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலும் ஆதாரமற்ற தகவல்களும் நிறைய வருகின்றன. ஆனால் குறிப்பாக சில போட்டியாளர்கள் வருவது உறுதி என்றும் கூறப்படுகிறது. அந்த வரிசையில் சிலர் கண்டிப்பாக இந்த 9வது சீசனில் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் தேனிசைத் தென்றல் தேவாவின் மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, டிவி சீரியல் நடிகைகள் ஜனனி மற்றும் பரினா ஆசாத் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் உள்ளிட்டோர் கண்டிப்பாக பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது வருகிற அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் போட்டியாளர்களை விஜய் சேதுபதி வீட்டுக்குள் அனுப்பும் போது தான் 100 சதவீதம் உறுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்