விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 இன்று மாலை கோலாகலமாக துவங்கி விட்டது. நடிகர் விஜய் சேதுபதி 2வது முறையாக இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக கமிட் ஆகியிருக்கிறார். போட்டியாளர்களை இன்று வீட்டுக்குள் அனுப்பி வருகிறார். முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நபரை பார்த்து விஜய் டிவி பார்வையாளர்கள் பலரும் அதிர்ந்து போய்விட்டனர். இன்னும் பலர் வாய்விட்டும் சிரிக்கின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் வெர்சன் துவங்கி 8 ஆண்டுகளாக 8 சீசன்களை கடந்துவிட்டது. இன்று பிக்பாஸ் சீசன் 9வது இன்று மாலை துவங்கியிருக்கிறது. விஜய் டிவியில் முதல் 7 ஆண்டுகள் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார். கடந்தாண்டில் அவர் விலகிய நிலையில் சீசன் 8 பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
இப்போது 9வது ஆண்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இனிதே துவங்கியுள்ளது. இன்று வீட்டுக்குள் போட்டியாளர்களாக சுமார் 15 பேர் முதல் 20 பேர் வரை செல்ல வாய்ப்புள்ளது. இந்த முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் மற்றும் வீட்டுக்குள் செல்வதை தொடர்ந்து நாளை முதல் பிக்பாஸ் வீட்டுக்குள் டாஸ்க் என்ற பெயரில் ரணகளம் ஆரம்பித்து விடும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்த வரை ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்தாலும் சில வாரங்களில் நிகழ்ச்சி சூடுபிடித்து விடுவது வழக்கம். மலையாளத்தில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பே துவங்கி விட்டது. இந்தியிலும் பிக்பாஸ் நடந்து வருகிறது. இப்போது தமிழில் விஜய் டிவியில் துவங்கி விட்டது.
இன்று துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டவர் வேறு யாருமல்ல, சமீபத்தில் இணையத்தில் கடும் விமர்சனத்தில் சிக்கிய வாட்டர்மெலன் புகழ் டாக்டர் திவாகர்தான். இவர் தன்னைத் தானே நடிப்பு அரக்கன் என்றும் புகழ்ந்து கொள்வதும் வழக்கம். சமீபத்தில்தான் இவர் கடுமையான விமர்சனத்தில் சிக்கி இணையத்தில் வைரலானார்.
அவர்தான் இந்த முறை பிக்பாஸ் சீசன் 9ல் முதல் போட்டியாளராக அறிமுகம் செய்யபப்ட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரை தொடர்ந்து அரோரா என்ற பெண்ணும் அதன்பிறகு எப்ஜே என்ற இளைஞரும் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர். தொடர்ந்து போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் சேதுபதி அனுப்பி வருகிறார். நாளை முதல் ஆட்டம் களைகட்ட துவங்கி விடும். அதே நேரத்தில் நடிப்பு அரக்கன் திவாகர் என்ன சேட்டை எல்லாம் பண்ணப் போகிறாரோ என்பதுதான் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.





