- Advertisement -
Homeபொழுதுபோக்குபழம்பெரும் பின்னணி பாடகி பி சுசீலா வாழ்க்கை திரைப்படமாகிறது - பி சுசீலாவாக மாறப் போகும்...

பழம்பெரும் பின்னணி பாடகி பி சுசீலா வாழ்க்கை திரைப்படமாகிறது – பி சுசீலாவாக மாறப் போகும் கதாநாயகி யார்? – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

சினிமாத்துறையில் சில கலைஞர்கள் தங்களது தன்னிகரற்ற திறமையால் உழைப்பால் உச்ச நட்சத்திரங்களாக மாறி விடுகின்றனர். ஒரு சூரியன் ஒரு சந்திரன் என்பது போல ஒரு கலைஞர் அவர் தான் என்றால் அவரை போல ஒருவர் என்று யாரையுமே சுட்டிக் காட்டிவிட முடியாது. அந்த அளவுக்கு புகழின் உச்சம் தொட்டு விடுகிறார்கள்.

அந்த வரிசையில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்களை தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களது பாணியை பின்பற்றி பலர் நடிக்கலாமே தவிர இவர்களது இடத்தை நிரப்பும் இடத்துக்கு ஒருவரும் வர முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் தனக்கான இடத்தை பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் பழம்பெரும் பின்னணி பாடகி பி சுசீலா பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். சமீபகாலமாக முதுமை காரணமாக அவர் பாடுவதில்லை என்றாலும் அவர் பாடிய பழைய பாடல்கள் எல்லாமே தேனில் முக்கி எடுக்கப்பட்ட பலாச்சுளைகள் போல மிக தித்திப்பானவை என்றால் அது மிகையல்ல.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே என்ற ஒரு பாடல் போதும். அவரது குரல் வளமை இனிமை குறித்து சொல்வதற்கு. அப்படிப்பட்ட பழம்பெரும் பாடகி பி சுசீலாவின் வாழ்க்கை திரைப்படமாக விரைவில் உருவாகிறது. இந்த படத்தை மும்பை மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைத்து தயாரிக்கின்றன.

- Advertisement -

சில்லுனு ஒரு காதல் பத்து தல போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா தான் இந்த படத்தை இயக்க உள்ளார். பி சுசீலாவின் வாழ்க்கை கதையை திரைப்படமாக உருவாக்க பி சுசீலா குடும்பத்தினரிடம் கலந்து பேசி சம்மதமும் பெற்ற நிலையில் அவரது வாழ்க்கை பின்னணி சம்பவங்கள் குறித்த தகவல்களுடன் ஸ்கிரிப்ட் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் பி சுசீலா கேரக்டரில் அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது கேரக்டருக்கு பொருத்தமான நடிகை யார் என்று தீவிரமாக டிஸ்கஷன் நடந்து வருகிறது. இந்திய சினிமாவில் பொருத்தமான நடிகையாக யாராக இருப்பார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. மிக விரைவில் நடிகை தேர்வு நடத்தப்பட்டு பி சுசீலாவாக நடிக்கப் போகும் நடிகை யார் என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.

- Advertisement -

சற்று முன்