தொடர் தோல்வி திரைப்படங்களையே கொடுத்து வந்த சிம்புவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது மாநாடு திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப்பை கான்செப்ட் ஆக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படமும் சிம்புவுக்கு வெற்றியை கொடுத்தது.
பிறகு பத்து தல படத்தில் நடித்தார் சிம்பு. ஆனால் அது அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையவில்லை. இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த திரைப்படமும் சிம்புவுக்கு திரையரங்குகளில் வரவில்லை. அவர் தேசிங்கு பெரிய சாமியுடன் ஒரு திரைப்படத்தில் இணைவதாக இருந்தது.
கமல்ஹாசனும் அதனை தயாரிப்பதாக அறிவித்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் எகிறியதால், அதிலிருந்து தயாரிப்பு நிறுவனம் பின் வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் சிம்புவின் 50 வது திரைப்படமாக அது உருவாகும் என்றும், அதனை எஸ்டிஆரே தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தற்போது அவர் மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைப் படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். ஜூன் 5-ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் சிம்புவுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, பார்க்கிங் பட இயக்குனர் ராம் குமார் மற்றும் டிராகன் பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து உடன் சிம்பு கை கோர்க்கிறார். இதில் முதலாவதாக ராம்குமார் உடனான படப்பிடிப்பு தொடங்குகிறது. புனேவில் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம். இதில் சந்தானத்திற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 11 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ரவுடித்தனம் நிறைந்த கல்லூரி மாணவர் கதாபாத்திரமாம். இதற்காக தனது நீண்ட முடி மற்றும் தாடியை எடுத்துக் கொண்டு காலேஜ் ஸ்டுடென்ட் ஆக வருகிறாராம் சிம்பு. விரைவில் அவர் சூட்டிங்கில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





