- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது மகன் லிங்காவுடன் செஸ் ஆடியதாக நடிகர் தனுஷ் சொன்னது டூப்பு - அது இன்னொருத்தரோட...

தனது மகன் லிங்காவுடன் செஸ் ஆடியதாக நடிகர் தனுஷ் சொன்னது டூப்பு – அது இன்னொருத்தரோட கதை, விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது 43வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அப்போது மேடையில் பேசிய நடிகர் தனுஷ், தனது மகன் லிங்காவுடன் செஸ் விளையாடிதாக கூறி ஒரு சம்பவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது நடிகர் தனுஷ் பேசியதாவது, நான் என்னோட பையன் லிங்கா கூட அப்பப்போ செஸ் விளையாடுவது வழக்கம். நான் அப்படி விளையாடும் போது அவரை அப்பப்போ ஜெயிக்க விட்டுடுவேன். ஒருநாள் அப்படி லிங்கா கூட செஸ் விளையாடிட்டு இருந்தேன். அன்னிக்கு புல்லா நாமதான் ஜெயிக்கணும். லிங்காவை ஜெயிக்க விடக்கூடாதுன்னு நெனைச்னே்.

- Advertisement -

அப்படி அவர் தோத்தா என்ன பண்றாருன்னு பார்க்கலாம்ன்னு நானே தான் அன்னிக்கு ஜெயிச்சேன். அவன் தோத்துகிட்டே இருந்தான். ஒரு கட்டத்துல சரி போதும் என்று நான் எழுந்தேன். அப்போ அவர், எங்க போறீங்க? உட்காருங்க என்று சொன்னார். ஏன்பா என்று கேட்டதற்கு, நான் இன்னும் ஜெயிக்கலையே? என்றார்.

சோ நாம ஜெயிக்கிற வரைக்கும் விளையாடித்தான் ஆகணும் என்று சொன்னார். இப்போது தான் புரிந்தது. நமக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வரும். சோதனைகள் வரும். ஆனால் நாம ஜெயிக்கிற வரைக்கும் போராடிட்டு இருக்கணும். ஜெயிக்கிற வரைக்கும் மோதி பார்த்திடணும் என்று நடிகர் தனுஷ் பேசியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, நடிகர் தனுஷ் தனது மகன் லிங்காவுடன் செஸ் விளையாடியதாக மேடையில் பேசியது 1992 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த பிரசண்டேஷனில் லெஸ் ப்ரவுன் என்னும் நபர் பேசிய வீடியோ தான் அது.

நாட் ஓவர் அண்டில் யூ வின். இவரே இன்னொருத்தர் கதையை தான் சுட்டு தன் வாழ்க்கையில் நடந்த மாதிரி பேசி இருக்கிறார் என்று ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது 1992ம் ஆண்டில் லெஸ் ப்ரவுன் என்பவர் பேசிய விஷயத்தை அப்படியே தனது வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல காப்பியடித்து நடிகர் தனுஷ் பேசியதாக ப்ளு சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்