- Advertisement -
Homeபொழுதுபோக்குசர்க்கரை பொங்கலில் ரசம் ஊத்தி சாப்பிட்ட மாதிரி இருந்தது… பராசக்தி படம் குறித்து விமர்சித்த பிரபலம்!

சர்க்கரை பொங்கலில் ரசம் ஊத்தி சாப்பிட்ட மாதிரி இருந்தது… பராசக்தி படம் குறித்து விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

இயக்குனர் சுதா கொங்கராக இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் ரவி மோகன் அதர்வா ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்த 100வது படம் இது. பராசக்தி படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றில் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

அதில் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, இந்த படத்தை 1937ல் ஆரம்பித்து 1964 65 வரை எடுத்திருப்பார்கள். மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து சின்னசாமி வரைக்கும் நமது கண்கள் முன் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்தோம். இந்தியை இன்னும் நாம் ஏன் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு சரியான பதிலாக இருக்கப் போகிறது என்று நினைத்துதான் பார்த்தோம்.

- Advertisement -

ஆனால் படத்தைப் பார்த்தால் இவர்களிடம் போய் எதிர்பார்த்து விட்டோமே இதுவும் வேண்டும், இனமும் வேண்டும் என்னும் அளவுக்கு ஆக்கிவிட்டார்கள். இந்த கதை பாலா எடுப்பது போல ராவான ஒரு கதை. இதை மணிரத்னம் ஸ்டைலில் கொஞ்சம் மசாலா எல்லாம் போட்டு கலர்ஃபுல்லாக எடுப்போம் என இயக்குனர் எடுத்திருக்கிறார். 2 பேரிடமும் அவர் உதவி இயக்குனராக இருந்தவர்.

இந்த படத்தின் கதையில் ஹீரோ ஒரு நல்ல ரவுடி. இந்த நல்ல ரவுடி அட்டகாசம் செய்கிறார். இந்த நல்ல ரவுடியை அடக்க கெட்ட போலீசை கொண்டு வந்து விடுகிறார்கள். அவர் திறமையான அதிகாரி. அவரும் ஹீரோவும் சண்டை போடுகிறார்கள். அதில் ஹீரோவின் நண்பர் இறந்து விடுகிறார். அதனால் மனமுடைந்த ஹீரோ ரவுடித்தனத்தை விடுகிறார். ஆனால் அவரது தம்பியும் பெரிய ரவுடியாகி விட்டார். இப்போது ஹீரோ அதிர்ச்சியாகி தம்பியிடம் படிக்கும் வேலையை பார் என அட்வைஸ் செய்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே தம்பியை வைத்து அண்ணனை கொன்று விடலாம் என போலீஸ் உள்ளே வருகிறார். உள்ளே வந்தவர் அண்ணனுக்கு பதிலாக தம்பியை கொல்கிறார். எனவே பழைய தொழிலை மீண்டும் கையில் எடுத்து வில்லனை எதிர்த்து ஹீரோ நிற்கிறார். பிறகு என்ன ஆனது என்பதற்குள் இந்தியைப் பற்றி பேசுகிறார்கள். இதில் 2 3 பாடல்கள் வேறு. இந்து திணிப்பை பற்றி படம் எடுத்துச் சொன்னால் ஹீரோ வில்லன் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

40 வருட கதையை 10 பாகங்களாக எடுக்கலாம். இவர்கள் 2 மணி நேரத்துக்குள் சொல்கிறார்கள். அதில் ஒரு மணி நேரம் ஹீரோயினுடன் ஹீரோ பாடல் பாடுகிறார். இந்தியை எதிர்க்கிறார். ஹீரோயினிடம் தெலுங்கு கற்றுக் கொள்கிறார். படத்தில் செயற்கை தனங்கள் நிறைய இருக்கின்றன. சிவகார்த்திகேயனின் ஓரளவுக்கு இயக்குனர் கொடுத்த வேலையை செய்வார். ஆனால் இதில் அதையும் செய்யவில்லை. ஆக மொத்தம் இந்த படம் சர்க்கரைப் பொங்கலின் ரசம் ஊற்றி சாப்பிட்ட மாதிரி இருக்கிறது என்று ப்ளு சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்