- Advertisement -
Homeபொழுதுபோக்குஜீவி பிரகாஷ்குமார் நடித்த ஹேப்பிராஜ் படம் எப்படி இருக்குது? விளாசித் தள்ளிய பிரபலம்!

ஜீவி பிரகாஷ்குமார் நடித்த ஹேப்பிராஜ் படம் எப்படி இருக்குது? விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஹேப்பி ராஜ். இந்த படத்தை மரியா ராஜா இளஞ்செழியன் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் ஜார்ஜ் மரியான் கௌரி பிரியா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

ஹேப்பி ராஜ் படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, இந்த படத்தின் மையக்கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த மையக் கதையை ஆரம்பத்தில் தொடங்கி விட்டு மீண்டும் படத்தின் கடைசியில்தான் அதற்குள் போகிறார்கள். இடையே இரண்டு மணி நேரம் கொலையாய் கொன்று விட்டார்கள்.

- Advertisement -

மைய கதையை படம் முழுவதும் கொண்டு வந்திருந்தால் முழு படமும் சூப்பராக இருந்திருக்கும். கடைசி கொஞ்ச நேரத்தில் தான் அதை கொண்டு வருகிறார்கள். அந்த கடைசி கொஞ்ச நேரத்துக்காக உயிரை எல்லாம் விட முடியாது. அது மட்டும் இன்றி இவர்கள் எடுத்த கதை இவர்களுக்கே புரியவில்லை. அவர்களே குழப்பி கொண்டார்கள்.

உதாரணத்துக்கு படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண் ஹீரோவிடம் நான் உன்னை லவ் செய்ய மாட்டேன் என்று சொல்லி நிராகரித்து விட்டு செல்கிறது. ஆனால் ஹீரோவோ இன்னொரு பெண்ணை காதல் செய்து அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்கிறார். அப்போது ஹீரோவின் அப்பாவோ பல பெண்களின் போட்டோவை எடுத்து போட்டு இதில் ஒரு பெண்ணை தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆடர் எல்லாம் போடுகிறார்.

- Advertisement -

ஒரு பெண் இவரை காதலிக்கவே தயாராக இல்லாதபோது ஊரில் இருக்கும் பெரிய பெரிய டான் எல்லாம் எப்படி பெண் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. குதிரை முட்டை என்று பெயர் இருப்பதாலேயே இந்த குடும்பத்தை ஒரு பயலும் மதிக்க மாட்டேங்கிறான் என்று சீன் வைத்துவிட்டு எனது மகன் திருமணத்திற்கு ஊரில் உள்ள உறவினர்களை அழைப்பேன் என்று அப்பா சொல்கிறார். உன்னை மதிக்காத அவர்களை வைத்துக்கொண்டு ஏன் திருமணத்தை நடத்த வேண்டும்?

மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கிறது என்றால் மையக்கதை ஓரளவுக்கு உருப்படியானது. ஆனால் அதை காமெடியாக சொல்கிறேன் என்று சொல்லி பயங்கரமாக இரிட்டேட் செய்துவிட்டார்கள். இந்த படத்தின் ஹீரோ ஜீவி பிரகாஷ் இல்லை. ஜார்ஜ் மரியான் தான். கடைசி கொஞ்ச நேரத்தை அவர் கையில் எடுத்து விட்டார். இந்த கொஞ்ச நேரத்துக்காக 2 மணி நேரம் பாடி தாங்குமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்