- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய சேதுபதிக்கு மார்க்கெட் அவுட்.. இனி தேறுவது கஷ்டம்.. இந்த ஹீரோ தான் டாப் என...

விஜய சேதுபதிக்கு மார்க்கெட் அவுட்.. இனி தேறுவது கஷ்டம்.. இந்த ஹீரோ தான் டாப் என கூறிய விநியோகஸ்தர் – பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்

- Advertisement -

கோலிவுட்டில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றியவர் விஜய் சேதுபதி. சினிமா பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்து படிப்படியாக முன்னேறி தற்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை அவர் பெற்று இருக்கிறார். அவரிடம் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதற்குரிய நியாயத்தை மிக அசால்ட்டாக செய்துவிட்டு சென்றுவிடுவார்.

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்த படங்கள் அனைத்துமே இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தன. அதன் காரணமாக விஜய் சேதுபதி கரியரின் பீக்கிற்கு சென்றார் ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை காண்பித்து ரசிகர்களை எளிதாகவே கவர்ந்துகொண்டார்.

- Advertisement -

ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் வில்லனாகவும் நடிப்பேன் என சொல்லி மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் கலக்கி இருந்தார் அவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் சைர நரசிம்மா ரெட்டி படத்தில் நடித்து பிறகு ஹிந்தியில் சமீபத்தில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

அதிலும் சொந்தமாக ஹிந்தியில் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் அவர். வெப் சீரிஸ் மட்டுமின்றி மெர்ரி கிறிஸ்மஸ் படத்திலும் நடித்திருக்கிறார் அந்த படம் டிசம்பர் மாதம் ரிலீசாக இருக்கிறது.‌ அதேபோல் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் படத்திலும் விஜய் சேதுபதிதான் வில்லன். படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ்

- Advertisement -

இப்படி வில்லனாக பல படங்களில் நடித்தாலும் அவர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து விரும்புகின்றனர். கடைசியாக தமிழில் டிஎஸ்பி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தோல்வியை சந்தித்தது. இதனை அடுத்த அவர் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் அதேபோல் ஆறுமுககுமார் என்பவரது இயக்கத்திலும் ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பேட்டி ஒன்றில், “விஜய் சேதுபதி படத்துக்கு ஓப்பனிங்கே இல்லை. ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் என்ற நிலைமை இருந்தது. அதனையடுத்து விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் என்ற நிலை உருவானது. ஆனால் இன்று சிவகார்த்திகேயனின் ஓப்பனங்கிற்கும் விஜய் சேதுபதிக்கும் சம்பந்தமே இல்லை. பிரின்ஸ் சுமாரான படம்தான். டிஎஸ்பியும் சுமாரான படம்தான். ஆனால் பிரின்ஸ் செய்த வசூலில் 15 சதவீதம்கூட டிஎஸ்பி செய்யவில்லை. அதற்கு காரணம் விஜய் சேதுபதி வில்லன், கெஸ்ட் ரோல் என செய்கிறார். அதனால் அவருக்கு இருந்த ஹீரோ இமேஜ் இறங்கிவிட்டது” என்றார்.

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், “விஜய சேதுபதி ஹூரோவாக நடிக்கும் படங்களுக்கு ஓப்பனிங்கே இல்லை. இனி அவர் ஹூரோவாக நடித்தால் எந்தளவிற்கு சக்சஸ் ஆகுமென்று தெரியவில்லை – திருப்பூர் சுப்ரமணியம்.இருக்கட்டும். ஆனால் பான் இந்தியா முழுக்க விஜய சேதுபதியை தெரிந்த அளவிற்கு சிவகார்த்தியை எத்தனை பேருக்கு தெரியும்” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்