- Advertisement -
Homeபொழுதுபோக்குபரிமளா அண்ட் கோ டைட்டில் மட்டுமல்ல, படமே பிரச்னை தான், காமெடியோ கதையோ எதுவுமே ஒர்க்...

பரிமளா அண்ட் கோ டைட்டில் மட்டுமல்ல, படமே பிரச்னை தான், காமெடியோ கதையோ எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை – கலாய்த்து தள்ளிய பிரபலம்!

- Advertisement -

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயராம் நடிகை ஊர்வசி மற்றும் சஞ்சனா சாண்டி மாஸ்டர் மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் பரிமளா அண்ட் கோ. இந்த படம் திரையரங்குகளில் நேற்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, திரிஷ்யம் படத்தை மனதில் வைத்துதான் இந்த படத்தை எடுத்திருப்பார்கள். ஆனால் படம் பார்க்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே இந்த படம் உருப்பட போவதில்லை என்பது நமக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. காரணம் என்னவென்றால் இந்த 4 பேரும் கொலையை செய்திருக்க மாட்டார்கள்.

- Advertisement -

அப்படியே செய்திருந்தாலும் இவர்கள் மாட்டிக்கொள்ள மாட்டார்கள் என்று தான் ஆரம்பத்திலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. திரிஷ்யம் படத்தில் மோகன்லால் ஹீரோவாக இருந்தாலும் அவர் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றி விடுவார் என்ற எண்ணமெல்லாம் நமக்கு வராது. அவர்கள் செய்திருந்த ஸ்கிரீன் ப்ளேவில் மோகன்லால் குடும்பம் மாட்டிக் கொள்ளுமோ? மோகன்லால் குடும்பத்தை காப்பாற்ற முடியாது என சீரியஸாக படத்தை கொண்டு சென்றிருப்பார்கள்.

ஆனால் இங்கே மேம்போக்காகவே திரைக்கதையை செய்திருக்கிறார்கள். இவர்களுடைய பிளான் என்னவென்றால் படத்தை காமெடியாக ஆரம்பித்து காமெடியாக கொண்டு போவது என்பதுதான். ஆனால் அதை எப்படி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்றால் ஸ்பூஃபாக ஆரம்பித்து ஸ்பூஃபாகவே படம் போய்க்கொண்டிருந்தது. காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை.

- Advertisement -

எந்த சீரியஸ் மோடுக்கும் படம் போகவே இல்லை. வில்லனை கொன்றுவிட்டார்கள். அவன் கொல்லப்பட வேண்டியன். படத்தை அதோடு முடித்திருக்கலாம். இவர்கள் எடுத்துக் கொண்ட கதையை இவர்களே தவறாக புரிந்து கொண்டு எடுத்து வைத்திருக்கிறார்கள். படம் ஆரம்பித்து இரண்டரை மணி நேரத்தில் கதையை எங்கெங்கே கொண்டு சென்று விட்டு கடைசி அரை மணி நேரத்தில் ஒரு கருத்து சொல்லி கருத்தூசி போட்டார்கள்.

யோகி பாபு அடிக்கும் காமெடிக்கெல்லாம் கோபம் தான் வந்தது. சில படங்கள் எல்லாம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தவறாக எடுத்து வைத்திருப்பார்கள். இவர்கள் டைட்டிலே தவறாக வைத்திருக்கிறார்கள். பரிமளா அண்ட் கோ என்று வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஜெயராம் தான் பரிமளா. ஏன் அவருக்கு அந்த பெயர் என்றால் அதெல்லாம் தெரியாது. நீங்கள் இந்த படத்தைப் பார்த்தால் உனக்கு டைட்டில் தான் பிரச்சனையா என்று கேட்பீர்கள். அதற்கு பிறகு உங்கள் இஷ்டம் என்று ப்ளு சட்டை மாறன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்