- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு ஹிட் படம் கொடுத்துட்டா உடனே விஜய் ஆகிட முடியுமா? நடிகர் சிவகார்த்திகேயனை சீண்டிப்பார்த்த பிரபலம்!

ஒரு ஹிட் படம் கொடுத்துட்டா உடனே விஜய் ஆகிட முடியுமா? நடிகர் சிவகார்த்திகேயனை சீண்டிப்பார்த்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். 12 ஆண்டுகளுக்கு முன் அவர் மெரினா படத்தில் நாயகனாக அறிமுகமான போது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 10 ஆயிரம். இன்று அவர் தனது 25வது படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் ரூ. 75 கோடி என்று சொல்லப்படுகிறது.

இப்படி ஒரு அபரிமிதமான வளர்ச்சி என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அதே நேரத்தில் அதற்கான உழைப்பு, திறமை, கதைகளை தேர்வு செய்த விதம் என சிவகார்த்திகேயனும் தனது முழு பங்களிப்பை தந்து வருகிறார். காமெடியான காதல் படங்களில் நடித்த அவர், அமரன் போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கவே அதிக மன தைரியம் வேண்டும்.

- Advertisement -

அதே நேரத்தில் அமரன் படத்தில் அவரது நடிப்பு குறை சொல்ல முடியாத அளவுக்கு அழுத்தமாகவும் இருந்தது. ரசிகர்களின் அபார வரவேற்பையும் பெற்றது. இப்போது ஏஆர் ரகுமான், டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி சுதா கொங்கரா என முக்கிய இயக்குனர்களின் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இதற்கிடையே நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து, அதன் தலைவராக செயல்பட்டு வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் இப்போது நடித்துவரும் இந்த படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேரமும் அரசியலில் கவனம் செலுத்த போகிறார்.

- Advertisement -

இதையடுத்து தமிழ் சினிமாவில் விஜய் இடத்தை பிடிக்கப் போவது சிவகார்த்திகேயன்தான் என்று தகவல் பரவியது. தி கோட் படத்தில், துப்பாக்கியை பிடிங்க சிவா என்று விஜய் சொல்லி என்னுடைய இடத்தில் இனி சிவகார்த்திகேயன் என சூசகமாக கூறிவிட்டதாகவும் இணையத்தில் பரபரப்பானது. தனது படங்கள் நன்றாக ஓடினாலும் தனக்கான கிரெடிட் கிடைப்பதில்லை, சமூக வலைதளங்களில் என்னை ஒரு குரூப் பலமாக அடிக்கிறது என்றும் சிவகார்த்தியேகன் சமீபத்தில் வருத்தப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது பதிவில் கூறியிருப்பதாவது, ஒரே ஒரு அமரன் படம் ஓடியதும் நீங்கதான் அடுத்த விஜய் என்று ஒரு குரூப் காமெடி செய்தால், இன்னொரு குரூப் அதை கலாய்க்க தான் செய்யும். லேசா கீறினதுக்கே இப்படி அழுதா எப்படி தம்பி? நடிப்பை மேலும் இம்ப்ரூவ் பண்ற வழியை பாருங்க, என்று விமர்சித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்