மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. அஜீத்குமார் ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் கொண்டாடி வரும் நிலையில், இது ஏகே ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்தமான ஒரு படமாக இருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. லாஜிக் இல்லாத இந்த படத்தை பொதுவான ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குட் பேட் அக்லி படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது, இந்த கதையில் முக்கால்வாசியை வாய்ஸ் ஓவரில் சொல்லி விடுகின்றனர். மீதி ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே விஷூவலில் காட்டுகிறார்கள். படத்தில் 4 காட்சிகள் மட்டுமே எக்ஸ்ட்ராவாக உள்ளது. இவ்வளவுதான் படமே. கதையோ திரைக்கதையோ எந்த ஒரு டெவலப்மென்ட்டும் இருக்காது. கதையில் எந்த ஒரு உயிரும் இருக்காது.
மீதி படத்தில் என்ன செய்து வைத்துள்ளார்கள் என்றால் ஹீரோ யார் தெரியுமா? எப்படிப்பட்டவர் தெரியுமா? என்ன செய்வார் தெரியுமா? என்னென்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா? இப்படி மாத்தி மாத்தி ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். படத்தில் இயக்குனர் ஹீரோவின் பேன் பாய் என்றால் இப்படி படம் எடுத்து உயிரை வாங்குவார்களாம்.
நீங்க பேன் பாயாக இருந்தால் அந்த காலத்தில் மன்னர்களை புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசு வாங்கிக் கொண்டு இருப்பார்கள் அல்லவா? அதுபோல் வாங்கிட்டு போங்க. முருகரைப் பார்த்ததும் அவ்வையார் பாடியது போல பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா என்று பாடல் பாடியது போல அஜீத் வீட்டு வாசலில் உட்கார்ந்து பாடிவிட்டு பரிசு கிடைத்தால் வாங்கிட்டு போங்க.
அதை விட்டுட்டு பேன் பாய் என்றால் இப்படி படம் எடுத்து எங்கள் ஏன் தாலியை அறுக்கிறீர்கள்? யாரும் ரசிகர்களை மனதில் வைத்து அவர்களுக்காக படம் எடுப்பது கிடையாது. படம் முழுக்க ரெபரென்ஸ் ரெபரென்ஸ் என சாவடித்து விட்டார்கள். அத்தனை பழைய பாடல்களை போட்டு வைத்து விட்டார்கள். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தெரிந்து விட்டது இந்த படம் விளங்காது என்பது.
இந்த படத்தில் எது பழையது என்று பார்த்தால் எல்லாமே பழையதுதான். படத்தின் டைட்டில் பழசு திரிஷா ஜாக்கி ஷெராப் சிம்ரன் டினு ஆனந்த் எல்லாருமே பழசுதான். அர்ஜூன் தாஸ் மட்டும்தான் புதிதாக தெரிகிறார். படத்துக்குள் 10 பழைய பாட்டை தூக்கி உள்ளே வைத்துள்ளார்கள். பழசை ஒன்றாக சேர்ந்து புதுசாக ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளார்கள் என ப்ளு சட்டை மாறன், இந்த படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.





