ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்த லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நேற்று நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து மேடையில் குறித்து மகள் ஐஸ்வர்யா, எங்கப்பாவை சிலர் சங்கி என்று கூறுகின்றனர். அவர் சங்கி அல்ல. சங்கியாக அவர் இருந்திருந்தால், லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்திருக்க மாட்டார் என ஆவேசமாக பேசினார்.
அதாவது குறிப்பிட்ட மதம் சார்ந்த, அந்த மதத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சிக்கு சிலர் ஆதரவாக இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை சங்கி என கிண்டலாக அழைப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் ரஜினி குறிப்பிட்ட ஒரு மதச்சாயம் பூசப்பட்டவராக சங்கி என பலரும் விமர்சிப்பதால், மகள் ஐஸ்வர்யா அப்படி ஒரு விளக்கமளித்து பேசினார்.
இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தனது பதிவு ஒன்றில், ரஜினி மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் 20க்கும் மேற்பட்டவர்கள் அந்த மாதிரியான ஒரு அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக தான் இருக்கின்றனர். அந்த வரிசையில் ரஜினிகாந்த் முதல் நிலையில் டாப்பில் இருந்து வருகிறார்.
சமீபத்தில், அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது அண்ணன் சத்யநாராயணா கெய்ட்வாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்படி குடும்பம் சகிதமாக அவர் பங்கேற்று தனது ஆதரவை அந்த அரசியல் கட்சி சார்பாளராக தன்னை காட்டிக்கொண்டார்.
அதேபோல் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ் இதில் பங்கேற்றார். அதே போல் விஷால் உள்ளிட்ட பலரும், ராமர் கோவில் விழாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு தங்களை ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டனர். இதில் பாடகி சித்ரா, வீடியோ வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
ரஜினி வரிசையில் தனுஷ், அர்ஜூன், சமுத்திரக்கனி, விஷால், விஷ்ணு விஷால், சந்தானம், செல்வராகவன், தம்பி ராமையா, கௌதம் மேனன், நடராஜ் (நட்டி), பிரபு, சிவாஜி மகன் ராம்குமார், மணிரத்னம், மாதவன், யோகி பாபு, பாக்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், கஸ்தூரி ராஜா என அந்த வரிசையில் நடிகர்களை பட்டியலிட்டுள்ளார். இவர்களும் சங்கிகள் என்ற லிஸ்ட்டில் இருப்பதாக ப்ளு சட்டை மாறன் கூறியது, இப்போது வைரலாகி வருகிறது.





