லைக்கா புரடக்சன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் லால் சலாம். இந்த படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது.
இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் விக்ராந்த், ரஜினிகாந்த் மகனாக நடித்திருக்கிறார். படத்தின் நாயகியாக தன்யா பாலகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஏழாம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டி குறித்து, ஒரு பதிவை டிவிட்டரில் தன்யா பாலகிருஷ்ணன் பதிவு செய்திருந்தார். அதில் தமிழக மக்களை இழிவுபடுத்தும் விதமாக அவரது பதிவு இருந்தால் பயங்கர சர்ச்சையானது. ஹேட் தன்யா என ஹேஷ்டாக்கும் டிரண்டிங் ஆகும் அளவுக்கு பிரச்னைச விஸ்வரூபம் எடுத்தது.
ஏனெனில் தன்யா அந்த பதிவில், தமிழர்கள் தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கறீர்கள். எங்கள் பெங்களூருவை ஆக்கிரமித்து எங்கள் ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம் என்று அதில் கூறியிருந்தார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பி, ஹேஷ்டாக்கும் ஆனால், இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என சபதம் செய்திருந்தார்.
இப்படி தமிழர்களை இழிவாக பேசி, தமிழில் இனிமேல் நடிக்கவே மாட்டேன் என்று சொன்ன தன்யா பாலகிருஷ்ணனை தான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். இவரை விட்டால் வேறு கதாநாயகிகளே கிடைக்கவில்லையா, இதற்கு ரஜினிகாந்த் எப்படி எதிர்ப்பு தெரிவி்க்காமல் விட்டார் என்று, ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆனால் இதைப்பற்றி எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. இந்த படத்தை சூப்பர் ஹிட் படமாக ஆக்குவது மட்டும்தான் அவர்களது வேலை. என்ஜாய் எனவும் கிண்டலாய் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





