- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தையே டைரக்ட் செய்த இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு இப்படி ஒரு நிலைமையா? அந்த நடிகர் ...

விஜய் படத்தையே டைரக்ட் செய்த இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு இப்படி ஒரு நிலைமையா? அந்த நடிகர் கால்ஷீட்டுக்காக இப்படி போராடறாரே ? – ஆதங்கப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்த வெங்கட்பிரபு சென்னை 28 படம் மூலம் இயக்குனராக மாறினார். சரோஜா கோவா மங்காத்தா மாநாடு போன்ற ஹிட் படங்களை கொடுத்த அவர் கடைசியாக இயக்கிய படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். சுருக்கமாக தி கோட் என அழைக்கப்பட்ட இந்த படத்தில் டபுள் ரோலில் நடிகர் விஜய் நடித்திருந்தார்.

நடிகர் விஜயுடன் சினேகா மீனாட்சி சௌத்ரி பிரசாந்த் பிரபுதேவா ஜெயராம் அஜ்மல் லைலா கனிகா வைபவ் மைக் மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தில், மட்ட பாடலுக்கு நடிகை திரிஷாவும் விஜயுடன் ஒரு குத்தாட்ட பாடலுக்கு ஆடியிருந்தார். படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் உலகளவில் ரூ. 445 கோடி வரை வசூலித்தது.

- Advertisement -

கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியான தி கோட் படம் தான் வசூலில் ரூ. 445 கோடி என்ற நிலையில் முதலிடம் பிடித்தது. அடுத்தது ரூ. 325 கோடி வசூலித்து சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும், அடுத்து ரூ. 265 கோடி வசூலித்து ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படமும் வசூலில் முறையே 2வது மற்றும் 3வது இடம்பிடித்தது.

தி கோட் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தை இயக்க வெங்கட்பிரபு கமிட் ஆகியிருந்த நிலையில், அவர் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் உங்களுக்கு கால்ஷீட் தர முடியும் என்று கூறிவிட்டார். 2026ம் ஆண்டு இறுதிக்கு பிறகுதான் என்னுடைய தேதி கிடைக்கும் என்று சிவகார்த்திகேயன் கூறியது கேட்டு வெங்கட்பிரபு அப்செட்டில் இருக்கிறார்.

- Advertisement -

அஜீத்குமாரும் கார் ரேஸில் பிஸியாக இருப்பதால் அவரிடம் வாய்ப்பு கேட்க முடியாத நிலையில், சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை எப்படியாவது வாங்கிவிடும் முயற்சியில் இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது இறங்கி உள்ளார். அதற்கான மாவீரன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அருண் விஷ்வா என்பவர் சிவகார்த்திகேயனுடன் நெருங்கிய நட்பில் இருப்பதால் அவரை சந்தித்துள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு.

இதற்காக அவரது அலுவலகத்துக்கு செல்லும் இயக்குனர் வெங்கட்பிரபு, எப்படியாவது சிவகார்த்திகேயனிடம் பேசி இப்போது நடித்து வரும் படங்களுக்கு பிறகு என்னுடைய இயக்கத்தில் நடிக்க அவர் நடிக்க சம்மதிக்க வையுங்கள் என்று அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரும் என்னால் இயன்றவரை முயற்சித்து அவரிடம் பேசுகிறேன் என்றும் கூறியிருக்கிறார். விஜய் படத்தை இயக்கிய வெங்கட்பிரபுவுக்கு இப்படி ஒரு நிலமையா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்