சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் உருவான படம் கேப்டன் மில்லர். கடந்த டிசம்பர் 15ம் தேதியே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. சாணிக்காயிதம் படம் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்தின் இறுதிக்காட்சிகள் மிகவும் வன்முறையாக இருந்ததால், படத்துக்கு ஏ சான்றிதழை, படத்தை பார்த்த சென்சார் போர்டு தந்தது. இதுவரை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் எந்த படமும் ஏ சான்றிதழ் பெற்றது இல்லை. அதனால், இது தங்களது தயாரிப்பு நிறுவனத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என, சென்சார் போர்டிடம் கோரிக்கை வைத்தது.
படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை வன்முறை காட்சிகள் நிறைந்திருப்பதால் படத்துக்கு ஏ சான்றிதழ்தான் வர முடியும். படத்தின் இறுதி காட்சியில் 4 நிமிட காட்சிகளை நீக்கினால் வேண்டுமானால், யுஏ சான்று வழங்குவதாக சென்சார் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த 4 நிமிட வன்முறை காட்சிகளை நீக்கி, படத்துக்கு யுஏ சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும், இது ஆரம்பம் முதல் இறுதி வரை வன்முறை காட்சிகளாகவே இருக்கிறது. படத்தின் மேக்கிங் சிறப்பாக இருந்தாலும், கதை திரைக்கதையில் நிறைய சொதப்பி உள்ளனர். எந்நேரமும் துப்பாக்கி சத்தமாகவே உள்ளது. குடும்பத்துடன் பார்க்க தகுதியற்ற படம் இது. ரசிகர்களுக்கான தனுஷ் படம் நடிக்காமல், மக்களுக்கான பொதுவான படங்களில் நடிக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
எனினும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும், ஓவர்சீஸ் பெற்ற வெளிநாடுகளிலும் கேப்டன் மில்லர் படத்துக்கு தியேட்டர் புக்கிங் அதிகளவில் நடப்பதாகவே தெரிய வந்தது. கேரளாவில் கேப்டன் மில்லர், அயலான் 2 படங்களுமே ரிலீஸ் ஆன நிலையில், அயலான் படம் ரூ.75 லட்சத்துக்கும், கேப்டன் மில்லர் படம் ரூ. 2 கோடிக்கும் விற்கப்பட்ட நிலையில், கேப்டன் மில்லர் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. அயலான் படம் திரையிட்ட தியேட்டர்களில் ஆப்பரேட்டரே படத்தை பார்க்க மறுத்திறுக்கிறார்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கேப்டன் மில்லர் முதல் நாள் ரூ. 17 கோடி வசூலித்துள்ளது. இதுவரை உலகளவில் கேப்டன் மில்லர் வசூல், ரூ.105 கோடியை கடந்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 50 கோடிதான் என்ற நிலையில், பட்ஜெட் தொகையில் இருமடங்கு வசூலித்திருப்பது கேப்டன் மில்லர் படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.





