- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து படத்தில் நடித்த நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு, என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…...

லப்பர் பந்து படத்தில் நடித்த நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு, என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா… – இப்படி எல்லாம் தாறுமாறாக பேசலாமா?

- Advertisement -

சமீபத்தில் கேரளா சினிமாத் துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சர்ச்சை மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடித்தது. இதுகுறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதால், பாலியல் துன்புறுத்தல் குறித்த பலவிதமான சர்ச்சைகள் வெளியானது. இதில் சில நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பானது.

மலையாள திரையுலகைச் சேர்ந்த சில நடிகைகள், பிரபல நடிகர்களின் மீது பல வருடங்களுக்கு முன்பே அவர்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். போலீசில் புகார் அளித்த நிலையில், அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் மலையாள நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும், வாய்ப்புகள் வேண்டாம் என்றால் நாம்தான் ஒதுங்கிக் கொண்டுச் செல்ல வேண்டும். அதற்கு இணங்கி செல்லக்கூடாது என்பது போன்ற எதிர்மறையான கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள மலையாள நடிகை சுவாசிகா மற்றும் நடிகை பீனா ஆண்டனி, நடிகர் மனோஜ் ஆகிய மூவரும் ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியின்போது, சம்பந்தப்பட்ட சில நடிகைகளின் புகார் குறித்தும் அவர்களது செயல்கள் குறித்தும் விமர்சிக்கும் விதமாக பேசியுள்ளனர்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இவர்கள், பெண்களின் மாண்பை இழிவுபடுத்துகின்றனர் என்று கூறி, ஏற்கனவே நடிகர்கள் மீது புகார் அளித்த நடிகை ஒருவர், இவர்கள் மூவர் மீதும் போலீசில் புகார் செய்துள்ளார். அதாவது, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்கள் கொடுத்த புகாருக்கு எதிராகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் இவர்கள் பேசி வருவதாகவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் சுவாசிகா, பீனா ஆண்டனி மற்றும் நடிகர் மனோஜ் ஆகிய மூவர் மீதும் கேரளா போலீசார் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக லப்பர் பந்து படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சுவாசிகா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்