- Advertisement -
Homeபொழுதுபோக்குகுபேரா படத்தின் ரன்னிங் டைம்… படத்தின் வெற்றியை பாதிக்காது - அவங்க எல்லாம் ஜெயிச்சாங்களே…. உதாரணங்களுடன்...

குபேரா படத்தின் ரன்னிங் டைம்… படத்தின் வெற்றியை பாதிக்காது – அவங்க எல்லாம் ஜெயிச்சாங்களே…. உதாரணங்களுடன் வெளியான தகவல்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் வருகிற 20ம் தேதி குபேரா படம் ரிலீஸாகிறது. தமிழ் இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது வெளியாகிறது. தெலுங்கில் முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கி உள்ளார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். முக்கிய கேரக்டரில் நாகர்ஜூனா நடித்திருக்கிறார்.

பிச்சைக்காரனாக இருக்கும் ஹீரோ எப்படி குபேரனாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம். ஊழல் அரசியல்வாதிகள் மோசடி தொழிலதிபர்களின் கருப்பு பணத்தை நாயகன் எப்படி அபகரிக்கிறார் என்பதே படத்தின் கதை. விறுவிறுப்பான இந்த கதைக்களத்தில் தனுஷ் நடிப்பு வேற லெலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

ஆனால் குபேரா படத்தின் நீளம் 3 மணி நேரம் 15 நிமிடம் என்ற தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியும் அலுப்பும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பெரும்பாலான படங்கள் 2 மணி நேரம் 15 நிமிடங்களாக மட்டுமே இருக்கின்றன. ஒரு சில படங்கள் மட்டுமே 2 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கின்றன.

ஆனால் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் என்பது ரசிகர்களை ஒரே இடத்தில் அமர வைப்பது என்பது பெரிய விஷயம். படத்தின் கதை திரைக்கதை ஓட்டம் விறுவிறுப்பாக இருந்தால் மட்டுமே அத்தனை மணி நேரம் பொறுமையாக சுவாரசியமாக படத்தை பார்க்க முடியும். இல்லை என்றால் படம் பார்க்க பார்க்க ரசிகர்களுக்கு சலிப்பும் அலுப்பும் வந்து எரிச்சலை உருவாக்கி விடும்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. குபேரா படத்தின் ரன்னிங் டைம் படத்தின் வெற்றியை நிச்சயமாக பாதிக்காது. ஏனென்றால் 3 மணி நேரத்துக்கு மேல் எடுக்கப்பட்ட பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படம் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடம். படம் மாஸ் ஹிட் ஆனது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படமும் 3 மணி நேரம் ஓடியது. படம் மாஸ் ஹிட் ஆனது. கமல் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படமும் 3 மணி நேரம் கடந்தும் ரன்னிங் டைம் இருந்தது. படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அதே போல் விக்ரம் நடித்த அந்நியன் விஜய் நடித்த நண்பன் போன்ற படங்களும் மாஸ் ஹிட் படங்கள்தான். இவை எல்லாமே 3 மணி நேரத்துக்கு மேல் ரன்னிங் டைம் படங்களாக இருந்தன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்