- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் மில்லர் படத்தால் எங்க பேரே கெட்டுப்போச்சு, புலம்பி தீர்த்த படத் தயாரிப்பு நிறுவனம்...

கேப்டன் மில்லர் படத்தால் எங்க பேரே கெட்டுப்போச்சு, புலம்பி தீர்த்த படத் தயாரிப்பு நிறுவனம் – கடைசியா அவங்க எடுத்த அந்த முடிவுதான் இதுல ஹைலைட்

- Advertisement -

நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்த கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இந்த படங்களுக்கான தியேட்டர் வணிகம், ரூ. 25 கோடி வரை நடந்துள்ளது.

இந்த படத்தை பொருத்த வரை, படத்தில் வன்முறை காட்சிகள் மிக அதிகமாக உள்ளது. லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இயக்குநர்களின் ஸ்டைலை பின்பற்ற பல இயக்குநர்கள் தயாராகி விட்டனர். ஏனெனில் அவர்களது வன்முறை படங்கள் பல நூறுகோடிகளை வசூலிப்பதால், அவர்களும் அதே பார்மூலாவுக்கு மாறி வருகின்றனர்.

- Advertisement -

அதனால் இந்த படத்துக்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதாவது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அதீத வன்முறை காட்சிகளுக்கு 10 ஏ சான்றிதழ் கொடுத்தாலும் தகும் என்கின்றனர். அந்த அளவுக்கு படம் முழுக்க ரத்தம், கத்தி, துப்பாக்கி, சண்டை, வன்முறை என படம் முழுக்க போர்க்களம் போலதான் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிைடையே கேப்டன் மில்லர் படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பாரம்பரியம் மிக்கது. இந்த நிறுவனம் தயாரித்த எந்த படத்துக்கும் இதுவரை ஏ சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் நொந்துப்போன படத் தயாரிப்பு நிறுவனம் யுஏ சான்று வழங்கும்படி சென்சார் போர்டிடம் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு சென்சார் போர்டு அதிகாரிகள், படத்தில் கடைசியில் வரும் 4 நிமிட வன்முறை காட்சிகளை நீக்கினால், யுஏ சான்றிதழ் மாற்றித் தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

இதையடுத்து, கேப்டன் மில்லர் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ் ஆகியோரிடம் கலந்து பேசியுள்ளனர். அதே நேரத்தில் யு சான்றிதழ் இருந்தால் கேப்டன் மில்லர் படத்துக்கு சாட்டிலைட் ரைட்ஸ் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் உடனே ஓகே சொல்லியிருக்கின்றனர்.

தொடர்ந்து, கேப்டன் மில்லர் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு, படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தின் கடைசி 30 நிமிட காட்சியை மிஸ் பண்ணிடாதீங்க என தனுஷ் கூறிய நிலையில், அதில் 4 நிமிட காட்சிகளை நீங்களே தூக்கீட்டீங்களே என பலரும் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்