- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் இணையத்தில் வெளியாக நாங்கள் காரணமல்ல - தொழில்நுட்பத்தை சுட்டிக்காட்டி மறுப்பு தெரிவித்த தணிக்கை...

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியாக நாங்கள் காரணமல்ல – தொழில்நுட்பத்தை சுட்டிக்காட்டி மறுப்பு தெரிவித்த தணிக்கை வாரியம்!

- Advertisement -

பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்சார் போர்டு தரப்பில் சான்றிதழ் வழங்காமல் தாமதித்ததால் இந்த படம் அந்த நாளில் வெளியாகவில்லை.

தொடர்ந்து படத்தில் சர்ச்சையான காட்சிகளும் வசனங்களும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த படத்துக்கு சான்றிதழ் வழங்குவதில் தணிக்கை வாரியம் காலதாமதம் செய்தது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் தணிக்கை வாரியத்துக்கு சாதகமான பதில்கள் கோர்ட்டில் கிடைத்ததால் இந்த வழக்கை தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றுக் கொண்டது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் ஜனநாயகன் படம் தணிக்கை செய்யப்பட்டது. ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதே காரணம் எனவும் கூறப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் வெளியானது.

இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழ் சினிமா நடிகர்கள் நடிகைகள் திரை உலகை சார்ந்த பலரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். சிலர் தணிக்கை வாரியத்திடம் இருந்துதான் இந்த படம் லீக் ஆகி இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் வைத்திருக்கின்றனர். இது குறித்து வலைதளங்களில் தொடர்ந்து பேசி தணிக்கை வாரியத்தை விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தணிக்கை வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, தமிழ் திரைப்படம் ஜனநாயகன் சென்ட்ரல் போர்டு ஆஃப் பிலிம் சர்டிபிகேசன் (சிபிஎஃப்சி) யில் இருந்து கசிந்து விட்டது என்று கூறும் அறிக்கைகள் அடிப்படையற்றவை மற்றும் தவறானவை. சான்றளிப்புக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரையரங்க திரைப்படங்களுக்கும் அது பாதுகாப்பான கேடிஎம் (கீ டெலிவரி மெசேஜ்) அமைப்பை பின்பற்றுகிறது. உள்ளடக்கத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் உள்ளது. மேலும் இந்த கேடிஎம் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் மட்டுமே இருக்கும்.

செல்லுபடியான கேடிஎம் இல்லாமல் திரைப்படத்தை அணுகவோ பார்க்கவோ முடியாது. எனவே ஜனநாயகன் திரைப்படத்தின் டிசிபி (டிஜிட்டல் சினிமா பேக்கேஜ்) மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரருக்கு உரிய ஒப்புதல் உடன் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அதன்பிறகு அவர்களிடமே அது இருந்து வருகிறது. அதனால் எங்கள் தரப்பில் இருந்து ஜனநாயகன் படம் லீக் ஆனது என்ற தகவல் முற்றிலும் உண்மை அல்ல என்று தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்