- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் போல அன்றே சென்சார் பிரச்னையை சந்தித்த பாரதிராஜாவின் படம் - பிரச்னைக்கு தீர்வு...

ஜனநாயகன் படம் போல அன்றே சென்சார் பிரச்னையை சந்தித்த பாரதிராஜாவின் படம் – பிரச்னைக்கு தீர்வு கண்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர்!

- Advertisement -

கடந்த 1987ம் ஆண்டில் வேதம் புதிது என்ற படத்தை இயக்குனர் பாரதிராஜா மிகவும் நேசித்து விரும்பி எடுத்திருந்தார். சென்சாரில் சிக்கி மிகுந்த சிக்கலுக்கு ஆளாகிய பிறகுதான் அந்த படம் திரைக்கு வந்தது. வேதம் புதிது படத்தை சென்சார் போர்டுக்கு தணிக்கைக்காக அனுப்பிய போது படத்தை சென்சார் செய்ய மறுத்துவிட்டார்கள்.

இந்த படத்தில் பல்லக்கு சுமந்து வரும் மடாதிபதிகள் சாமியார் குறித்த காட்சி பெரிய அளவில் விமர்சனமாக பார்க்கப்பட்டது. மேலும் இதில் முற்போக்குவாதியாக பாலு தேவர் கேரக்டரில் சத்யராஜ் நடித்திருந்தார். சாதிய கொடுமை எதிர்க்கும் காட்சிகள் இந்த படத்தில் நிறைய இருந்தன. அதனால் ஜனநாயகன் படம் போல வேதம் புதிது படமும் சென்சாரில் சிக்கிக்கொண்டது.

- Advertisement -

இந்த படத்திற்கு சர்டிபிகேட் கொடுக்க முடியாது என்று முடிவாக கூறி விட்டார்கள். கேட்டால் மேலிடத்து உத்தரவு என்றார்கள். இதனால் கோபத்தில் கொந்தளித்துப் போன இயக்குனர் பாரதிராஜா, என் படத்துக்கு சர்டிபிகேட் தராவிட்டால், இந்தப் படத்தின் ஃபிலிம் ரோல்களை சாஸ்திரி பவன் முன்பு எரிப்பேன்.

அப்போது நீங்கள், தமிழ்நாடு முழுவதற்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும் என்றும் சென்சார் போர்டு அதிகாரிகளை எச்சரித்தார். அப்படியும் சென்சார் போர்டு அதிகாரிகள் அசைந்து கொடுக்கவில்லை. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் காதுகளுக்கு இந்த பிரச்னை சென்றது.

- Advertisement -

இந்த சென்சார் சர்ச்சையை தீர்த்து வைக்க எம்ஜிஆரே முன்வந்தார். வேதம் புதிது படம் அவருக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தின் உள்ளடக்கத்தை மிகவும் ரசித்த எம்.ஜி.ஆர், நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பாரதிராஜாவிடம் கூறியிருக்கிறார்.

எம்ஜிஆர் தலையிட்டதால் அந்த படம் குறித்த சர்ச்சைகள் அடங்கியது. பிறகுதான் வேதம் புதிது படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் கிடைத்து படம் வெளியானது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கடைசியாகப் பார்த்து ரசித்த திரைப்படமும் வேதம் புதிது தான். அதன்பிறகு அவர் படம் எதுவும் பார்க்காமல் மறைந்து விட்டார்.

- Advertisement -

சற்று முன்