- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தில் மாற்றம் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள், எச்சரிக்கை செய்துள்ள சென்சார்...

இந்தியன் 2 படத்தில் மாற்றம் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள், எச்சரிக்கை செய்துள்ள சென்சார் போடு – அப்போ இந்த விதிமீறல்களை டைரக்டர் ஷங்கர் கவனிக்கலையா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் வருகிற 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 2 படம் வெளியாகிறது. இந்த 2ம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3ம் பாகமும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படம் ஆறு மாதங்கள் கழித்து, வரும் 2025ம் ஆண்டில் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தியன் 2 படம் சென்சார் போர்டில் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இது யு/ஏ படமாகவும் 180 நிமிடங்கள், 4 விநாடிகள் ( 3 மணி நேரம், 4 விநாடிகள்) வரை திரையில் ஓடக்கூடிய திரைப்படமாக உள்ளது. வழக்கமாக இரண்டு மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரத்துக்குள் படங்கள் ஓடும் நேரம் உள்ள நிலையில், 3 மணி நேரம் வரை இந்தியன் 2 படம் இருப்பது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஆனால் படத்தின் காட்சிகள் அடுத்தடுத்து விறுவிறுபு்பாக இருக்கும் பட்சத்தில் 3 மணி நேரம் பெரிய அளவில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்காது. அதே நேரத்தில் படத்தின் காட்சிகள், ஜவ்வாக இழுக்கும் பட்சத்தில் ரசிகர்கள் மிக விரைவிலேயே சோர்வடையவும், எரிச்சலடையவும் வாய்ப்புள்ளது. இதை எல்லாம் கவனித்து அதற்கேற்ப படத்தின் ஓட்டத்தை விறுவிறுப்பாக, சுவாரசியமாக ஷங்கர், கமல் உருவாக்கி இருப்பார்கள் என்று நம்பலாம்.

- Advertisement -

இதற்கிடையே இந்தியன் 2 படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், முக்கியமான 5 விஷயங்களில் கட்டாயம் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. அதன்படி படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளில், எச்சரிக்கை வாசகங்களை வெள்ளை பின்னணியில், கருப்பு எழுத்துகளில் பெரிதாக வைக்க வேண்டும். காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும்.

குறைந்த ஆடைகள் அல்லது ஆடைகள் இல்லாமல் நடிகர்கள் தோன்றும் காட்சிகளில் மாற்றம் செய்ய வேண்டும். சில சர்ச்சைக்குரிய வசனங்களை கட்டாயம் படத்தில் இருந்து நீக்க வேண்டும். படத்தில் வரும் காப்புரிமை பெற்ற விஷயங்களுக்கு, என்ஓசி எனப்படும் தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய விஷயங்களை கட்டாயம் மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்