- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதலன் படத்தில் நடிக்க முதலில் டைரக்டர் ஷங்கர் கமிட் செய்தது இந்த ஜோடியா? - அடேங்கப்பா,...

காதலன் படத்தில் நடிக்க முதலில் டைரக்டர் ஷங்கர் கமிட் செய்தது இந்த ஜோடியா? – அடேங்கப்பா, கேட்கவே பிரமிப்பா இருக்குதே!

- Advertisement -

இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரமாண்டம் என்ற வார்த்தை அவருடன் ஒட்டிக்கொண்டு விட்டது. அதை நிரூபிக்கும் விதமாக அவரும் தன் படங்களில் பலவிதமான பிரமாண்டங்களை காட்டி ரசிகர்களை அசத்திக்கொண்டே இருக்கிறார். ரோட்டுக்கு, மலைக்கு, ரயிலுக்கு, கடைசியில் பாடல் காட்சியில் துணை நடிகர்களுக்கு கூட வயிற்றில் பெயிண்ட் அடித்து விடுகிறார்.

இப்போது இந்தியன் 2 இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வரும் இயக்குநர் ஷங்கர் கடந்த 1994ம் ஆண்டில், அதாவது 30 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய படம்தான் காதலன். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா, கதாநாயகியாக நக்மாக ஆகியோர் நடித்திருப்பர்.

- Advertisement -

கிரிஷ் கர்னாட், எஸ்பி பாலசுப்ரமணியம், வடிவேல், மனோரமா, வில்லனாக ரகுவரன் நடித்த இந்த படம், 30 ஆண்டுகளுக்கு முன், மிகவும் பாராட்டப்பட்ட படமாக, மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பேட்டராப் பாடல், டிரண்டிங் ஆகி எல்லா இடங்களிலும் ஒலித்தது. பிரபுதேவாவுக்கு நல்ல ஒரு நடிகராக அங்கீகாரமும் கிடைத்தது. இதில் பிரபுதேவாவுக்கு, சியான் விக்ரம் பின்னணி குரல் பேசியிருப்பார்.

இந்த படத்துக்கு பிறகுதான் சியான் விக்ரம் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன், ஐ போன்ற படங்களில் நடித்தார். நடிப்பில் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் சியான் விக்ரம் இப்படி பல நடிகர்களுக்கு பின்னணி குரல் பேசியிருக்கிறார். காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு பின்னணி குரலாக ஒலித்தது சியான் விக்ரமின் குரல்தான்.

- Advertisement -

கவர்னர் காக்கர்லா பெண்ணான ஸ்ருதியை (நக்மா), ஹெட் கான்ஸ்டபிள் எஸ்பி பாலசுப்ரமணியனின் மகன், கல்லூரி மாணவன் பிரபு (பிரபுதேவா) காதலிப்பதுதான் கதை. மிக பிரபலமான முக்காலா, முக்காபுலா முக்காபலா பாடல் இடம்பெற்றதும் இந்த படத்தில்தான்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் முதலில் பிரபுதேவா கேரக்டரில் நடிக்க இருந்தது பிரசாந்த் தான். அவரைதான் ஷங்கர் ஹீரோவாக முடிவு செய்திக்கிறார். ஆனால், பிரசாந்த் பிஸியாக இருந்ததால், கால்ஷீட் தர முடியவில்லை. அதே போல், பாலிவுட் ஸ்டார் நடிகை மாதுரி தீக்‌ஷித் தான், அதில் நக்மா கேரக்டரில் நடிக்க வேண்டியவர். அவரிடம் ஷங்கர் பேச்சு நடத்தியும், அவரால் கால்ஷீட் தர முடியவில்லை. அதன்பிறகு காதலன் படத்தில் பிரபுதேவா – நக்மாவை ஷங்கர் ஜோடியாக்கி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்